புயலால் சாய்ந்த புளியமரத்தை அகற்ற பேரம் பேசும் விஏஓ - வைரல் ஆடியோ
புயலால் சாய்ந்த புளியமரத்தை அகற்ற பேரம் பேசும் விஏஓ - வைரல் ஆடியோ
விஏஓ நாகராஜன்
சாய்ந்த மரங்களுடன், உயிருடன் இருக்கும் மரத்தையும் வெட்ட பேரம் பேசும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மணப்பாறை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஜா புயலால் சாய்ந்த புளியமரத்தை பொது ஏலம் விடாமல், கிராம நிர்வாக அலுவலர் அதிக விலைக்கு பேரம் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
கஜா புயலால் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான புளியமரங்களும், வேப்பமரங்களும் சாய்ந்துள்ளன. நெடுஞ்சாலையோரம் சாய்ந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பொது ஏலம் விட்டு அகற்றி வருகின்றனர்.
இதேபோல் வையம்பட்டி அருகேயுள்ள தேக்கமலை கோவில்பட்டியில் கோயிலுக்கு சொந்தமான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அந்த மரத்தை வெட்டி அகற்றுவது தொடர்பாக அனுமதி கேட்டு மர வியாபாரி ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜனை அணுகியுள்ளனர்.
பொது ஏலம் விட்டு புளியமரத்தை வெட்டி அகற்றுவதற்கு பதில், விஏஓ நாகராஜன் தன்னிச்சையாக அதிக விலைக்கு பேரம் பேசியுள்ளார். தனக்கு மட்டுமின்றி கிளர்க், ஆர்.ஐ., தாசில்தார் வரை அனைவரும் பணம் கொடுக்க வேண்டும் என்று விஏஓ நாகராஜன் பேசியது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்த மரங்களுடன், உயிருடன் இருக்கும் மரத்தையும் வெட்ட பேரம் பேசும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Also see... வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.