• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பிளாஸ்டிக் பாட்டிலில் தலையைவிட்டு சிக்கிக்கொண்ட நாய்.. வைரல் வீடியோ

பிளாஸ்டிக் பாட்டிலில் தலையைவிட்டு சிக்கிக்கொண்ட நாய்.. வைரல் வீடியோ

பாட்டிலில் சிக்கிய நாயின் தலையை விடுவித்த சைக்கிளிஸ்ட்

பாட்டிலில் சிக்கிய நாயின் தலையை விடுவித்த சைக்கிளிஸ்ட்

ஆதரவற்ற நாய்களுக்கு உதவுவது ஒன்றும் பெரிதில்லையே. பலரும் செய்வது தானே என்று தோன்றலாம். சைக்கிளிஸ்ட்டுகள் செய்ததும் அதே போன்ற ஒரு மனித நேயம் மிக்க செயல் தான்.

  • Share this:
மனிதனின் மிகச்சிறந்த நண்பன் நாய் என்பது உலகறிந்த கூற்று. அதே போல, சில நேரங்களில் நாய்க்கும் மனிதனின் உதவி இன்றிமையாததாக அமைந்து விடுகிறது. அதைப் போன்ற ஒரு நெகிழ்வான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

அன்பாகவும், கனிவாகவும் இருப்பதே மகிழ்ச்சியாக இருப்பதன் அடிப்படை என்பது பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மகிழ்ச்சியின் முதல் படி, கனிவு என்பதற்கு அடையாளமாக, மைக்ரோப்ளாகிங் தளமான டிவிட்டரில் அனைவரையும் சந்தோஷமாக கண்கலங்க வைக்கும் ஒரு வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சைக்கிலிஸ்ட்டுகள் குழு ஒன்று ஒரு நாய்க்கு உதவிய வீடியோ ஒன்று டிவிட்டரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆதரவற்ற நாய்களுக்கு உதவுவது ஒன்றும் பெரிதில்லையே. பலரும் செய்வது தானே என்று தோன்றலாம். சைக்கிளிஸ்ட்டுகள் செய்ததும் அதே போன்ற ஒரு மனித நேயம் மிக்க செயல் தான். ஆனால், இந்த வீடியோ வைரலாக பகிரப்படுவதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஒரு பெரிய சிக்கலில் இருந்து விடுபட்டால் நீங்கள் எப்படி அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள்? நெட்டிசன்கள் மனதை கொள்ளை கொண்ட அந்த வீடியோவில் என்ன இருந்தது.

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு நாயின் தலை சிக்கியிருந்தது. அதனைக் கண்ட ஒரு சைக்கிளிஸ்ட்டுகள் குழு, தவிக்கும் நாய்க்கு உதவி செய்ய முன்வந்தனர். நாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலை நாயின் தலையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்தார்கள். வீடியோ கிளிப்பின் தொடக்கத்தில், சைக்கிளிஸ்ட் ஒருவர் மென்மையாக பாட்டிலை நீக்க முயற்சி செய்யும் போது, அவர் உடன் வந்தவர்களும் உதவ முன்வந்தனர். இவர்கள் பாட்டிலை நீக்க முயற்சி செய்யும் போது, நாயும் அமைதியாக அமர்ந்திருந்தது ஆச்சரியம்.

தனக்கு உதவி செய்யவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்த நாய், தன்னை விடுவிப்பதற்காக பொறுமையாகக் காத்திருந்தது. பொறுமையின் சிகரம் என்றே அந்த நாயைக் கூறலாம். அதன் தலை விடுவிக்கப்பட்ட நொடியில், எல்லையில்லாத மகிழ்ச்சியை உணர்ந்த நாய், அதை மிக மிக அழகாக நம்மை நெகிழச்செய்யும் வகையில் வெளிப்படுத்தியது. உற்சாகத்தில் குதித்து, தான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்த வாலை ஆட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றியவர்களை சுற்றி சுற்றி வந்து நன்றியைத் தெரிவித்தது.

Also read... அமெரிக்க மனிதரின் ட்ரக்கில் சிவப்பு அணில் செய்த வேலை - இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!

அது மட்டுமின்றி, நாய்கள் எப்போதுமே தன்னுடைய நன்றியுணர்வை, அன்பைத் தெரிவிக்க, கால்களை சுற்றி வருவதும், கால்களை மென்மையாக நக்கவும் செய்யும். தன்னை பாட்டிலில் இருந்து விடுவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சைக்கிளிஸ்ட்டுகளை சுற்றி வந்து அவர்கள் மீது குதித்து கால்களை நக்கி நன்றி கூறியது.

“ஹீரோக்கள் பாட்டிலில் சிக்கியிருந்த நாயின் தலையை விடுவித்தார்கள். அந்த நாய் அதற்கு எப்படி நன்றி தெரிவிக்கிறது பாருங்கள்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட வீடியோ இங்கே.



அக்டோபர் 5 அன்று பகிரப்பட்ட வீடியோ தற்போது வரை கிட்டதட்ட இரண்டு லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. “அன்பாக இருப்பது அவ்வளவு கடினமில்லை. அந்த நாய் தன்னுடைய நன்றியை தெரிவிக்க அவ்வளவு முயற்சி செய்கிறது” என்ற பல்வேறு கருத்துகளுடன் வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: