கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான கணக்கில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் தினசரி நடைமுறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் ஜம்மு-காஷ்மீரில் படித்து வரும் ஆறு வயது சிறுமி நீண்ட நேரம் நீடிக்கும் ஆன்லைன் வகுப்புகளால் தான் மகிழ்ச்சியடையவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த பிரச்சினையை பற்றி விவரிக்க முடிவு செய்த அந்த சிறுமி அது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவுரங்கசீப் நக்ஷ்பாண்டி என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், " காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு நீண்ட நேரம் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அதிக வீட்டு பாட சுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார்" என்று வீடியோவிற்கு தலைப்பு செய்திருந்தார்.
45 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், தனது வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடருவதாக அந்தச் சிறுமி வருத்தத்துடன் கூறியுள்ளார். சிறுமி வீடியோவில் கூறியதாவது, "ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் ஈ.வி.எஸ் பாடங்கள் படிக்க வேண்டி உள்ளது. பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது," என்று சிறுமி கை சைகைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் அவர் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் வெளிப்படுத்தினார்.
இறுதியாக "சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளைச் சமாளிக்க வேண்டும், மோடி சார்?" எனக்கேட்டுள்ளார். சில நொடிகள் மவுனத்திற்குப் பிறகு, "என்ன செய்ய முடியும்? அஸ்லாம் அலைக்கும், மோடி சார், வணக்கம்." என்று வீடியோ பதிவை முடித்துள்ளார்.
https://twitter.com/naqshzeb/status/1398702475637452803
கடந்த சனிக்கிழமையன்று ட்விட்டரில் வெளியான சில நொடிகளிலேயே இந்த பதிவு ஆயிரக்கணக்கான யூசர்களின் வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்றது. அது மட்டுமல்லாமல், பல ட்விட்டர் யூசர்களும் இந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்துள்ளனர். ட்விட்டர் யூசர்கள் பலர் சிறுமியின் புகாருக்கு பதிலளித்துள்ளனர். அதில் ஒரு யூசர் கமெண்ட் செய்திருந்ததாவது, இமயமலையின் உயரத்தை விட குழந்தையின் கியூட்னஸ் மிகஅதிகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மற்றொரு யூசர் குறிப்பிட்டுள்ளதாவது, "என்ன ஒரு அழகு. மோடி ஜி, பல இளம் மனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த சிறுமியின் துயரங்களை நீங்கள் கேட்கிறீர்களா? ஆன்லைன் வகுப்புகள் என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் கமெண்ட் செய்த ஒருவர் இந்த தொற்றுநோய் அப்பாவி குழந்தைகளை எவ்வாறு மோசமாக பாதித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
https://twitter.com/AnirudhAtole/status/1399000553959563274
https://twitter.com/jayaranga/status/1399050812488183813
https://twitter.com/SharesFit/status/1399053164121235458
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl Child, Kashmir, Modi