• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மனிதர்களுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து - வைரலாகும் வீடியோ!

மனிதர்களுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து - வைரலாகும் வீடியோ!

மனிதர்களுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து

மனிதர்களுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து

அந்த சிறிய வெள்ளை வாத்து 'குவாக், குவாக்' என்ற சத்தத்துடன் மாரத்தானில் தன்னால் முடிந்த அளவு வேகத்தை தந்து ஓடியது.

  • Share this:
நமக்கு அருகில் இருப்பவர்கள் வேடிக்கையான சில செய்கைகளை செய்தாலே நாம் மிகவும் குஷி ஆகி விடுவோம். அதை பார்த்து பார்த்து பல முறை சிரிக்க செய்வோம். அதே போன்று சுட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை பார்த்தாலும் நம்மை அறியாமலே நாம் வாய்விட்டு சிரிப்போம். மனிதர்கள் செய்யும் சேட்டைகளுக்கே இப்படி சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் விலங்குகள் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் நம்மை மேலும் மகிழ்ச்சியாக்கும்.

இப்படியொரு வேடிக்கையான விஷயம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்துள்ளது. எப்போதும் நியூயார்க்கில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மாரத்தான் போட்டிகளை நடத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடி கொண்டிருந்தனர். அப்போது தீடீரென்று எல்லோரும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். மாரத்தானில் ஓடுபவர்களுக்காக தான் இந்த கொண்டாட்டம் என்று எல்லோரும் நினைத்திருந்தனர்.

ஆனால், அங்கு நடந்த கதையே வேறு. மாரத்தானில் கலந்து கொண்ட ஆயிர கணக்கான மக்களுடன் ஒரு அழகிய வெள்ளை வாத்தும் அந்த போட்டியில் கலந்து கொண்டு வாத்து நடையை தொடங்கியது. இதை அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாரத்தான் போட்டியில் ஓடுபவர்கள் எல்லோரும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படியொரு வேடிக்கையான மாரத்தான் போட்டியை இதுவரை அங்கிருந்த யாருமே கண்டிருக்க மாட்டார்கள்.

அந்த சிறிய வெள்ளை வாத்து 'குவாக், குவாக்' என்ற சத்தத்துடன் மாரத்தானில் தன்னால் முடிந்த அளவு வேகத்தை தந்து ஓடியது. அதனுடைய காலில் சிறிய அளவிலான சிவப்பு நிற ஷூவையும் அது அணிந்திருந்தது. இது பார்ப்பதற்கு மிக அழகான காட்சியாக இருந்தது. மாரத்தான் போட்டியில் வாத்து கலந்து கொண்டதை அங்கிருந்த பலர் வீடியோவாக படம் பிடித்தனர்.



 




View this post on Instagram





 

A post shared by Wrinkle 🦢 宙紋✨ (@seducktive)






இந்த வாத்து மாரத்தான் வீடியோவை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏற்ற சிறப்பான தலைப்பையும் அவர் தந்துள்ளார். "நான் இன்று நியூயார்க் மாரத்தானில் ஓடினேன்!! நான் அடுத்த ஆண்டு இதை விடவும் சிறப்பாக ஓடுவேன்! என்னை பாராட்டிய அனைத்து மனிதர்களுக்கும் எனது நன்றிகள்" என்று அந்த வீடியோவின் கீழ் அவர் பதிவிட்டுள்ளார். இது வாத்து சொல்வது போன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also read... சாலைப் பள்ளங்களை மூடும் ’பாத்ஹோல் ராஜா’ - யார் இந்த பிரதாப் பீமசேன ராவ்?

இந்த வாத்து மாரத்தான் வீடியோ மிக சீக்கிரமே நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி விட்டது. இந்த வீடியோவை சுமார் 8.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 40,000-த்தும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள் மற்றும் ஆயிர கணக்கானோர் வேடிக்கையான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், "ஓடு சுட்டி வாத்தே ஓடு!" என்று கமெண்ட் செய்துள்ளார். இன்னும் சிலர், "உங்கள் காலில் உள்ள அந்த சின்ன ஷூக்கள் எனக்கு வேண்டும்", " நீ ஓடுவது மிக அழகாக உள்ளது", "உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம்", "உன்னை போன்ற ஒரு ஹீரோவை தான் நாங்கள் இவ்வளவு நாள் எதிர் பார்த்திருந்தோம்" போன்ற விளையாட்டான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். எது எப்படியோ, நெட்டிசன்களுக்காவே தினமும் ஒரு வீடியோ கிடைத்து விடுகிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: