மழலைக் குரலில் பாட்டு, வெட்கம், மகிழ்ச்சி...! ஆயிரம் முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் க்யூட் வீடியோ

மழலைக் குரலில் பாட்டு, வெட்கம், மகிழ்ச்சி...! ஆயிரம் முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் க்யூட் வீடியோ
  • News18
  • Last Updated: November 15, 2019, 11:28 AM IST
  • Share this:
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலை மழலைக்குரலில் குழந்தை பாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புக்கும் சுட்டித்தனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களோடு நேரத்தை செலவிட்டால் நம்முடைய மனசும் குழந்தையாக மாறிவிடும். அதேபோல், பார்த்ததும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கும் குழந்தைகளிடம் நாம் சரியானதையே செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மை பார்த்து சரியானவற்றை உள்வாங்கி வளர்வார்கள்.

தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளின் குறும்புத்தனங்களை அனைவரும் பார்க்க முடிகிறது.


அப்படி, அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலை மழலைக்குரலில் குழந்தை பாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாட்டை பாடி முடித்துவிட்டு, அதன் பின்னர் அந்தக்குழந்தை வெட்கப்படும் அழகானது எல்லாவற்றையும் விட அழகாக உள்ளது.

ஆயிரம் முறை பார்த்தாலும் அந்தக்குழந்தையின் வெட்கம், சிரிப்பு என்று ஒவ்வொரு ரியாக்‌ஷன்களும் நம்மை ரசிக்க வைக்கிறது. தற்போது வரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக்ஸ் செய்துள்ளனர்.

Also See...
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்