Video: மேடையில் ஆடுவதைப் பார்த்து அழகாக நாட்டியமாடும் சிறுமி...

Video: மேடையில் ஆடுவதைப் பார்த்து அழகாக நாட்டியமாடும் சிறுமி...
  • Share this:
மேடையில் நாட்டியம் ஆடுவதைப் பார்த்து தானும் பார்வையாளர்கள் வரிசையில் அழகாக நாட்டியமாடும் சிறுமியின் வீடியோ இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புக்கும் சுட்டித்தனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களோடு நேரத்தை செலவிட்டால் நம்முடைய மனசும் குழந்தையாக மாறிவிடும்.
அதேபோல், பார்த்ததும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கும் குழந்தைகளிடம் நாம் சரியானதையே செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மை பார்த்து சரியானவற்றை உள்வாங்கி வளர்வார்கள்.


கீழ்காணும் வீடியோ அண்மை நாட்களாக இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேடையில் பரதநாட்டியம் ஆடும் பெண்ணை பார்த்து, பார்வையாளர் வரிசையில் இருந்து சுட்டி பெண் குழந்தை ஒன்று இசைக்கு ஏற்ப நளினத்துடன் தானும் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டது. இந்த காட்சி அங்கு கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

வீடியோ:
Watch Also:
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்