ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஏமாத்திட்டாங்க... 50 இன்சல 6 இன்ச் கம்மியா இருக்கு - டிவியை அளந்து பார்த்து புகார் அளித்த நபர்.!

ஏமாத்திட்டாங்க... 50 இன்சல 6 இன்ச் கம்மியா இருக்கு - டிவியை அளந்து பார்த்து புகார் அளித்த நபர்.!

சாம்சங் டிவி

சாம்சங் டிவி

Trending | சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் 8 சீரிஸ் TU8000 50இன்ச் டிவியை ஆன்லைனில் வாங்கிய வாடிக்கையாளர் டெலிவரி செய்யப்பட்ட அந்த டிவியை அளந்து பார்க்கும் பொழுது 44 இன்ச் தான் இருந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏ-இசட் எல்லா பொருட்களையும் வீட்டு வாசலில் கிடைக்கும்படியாக இ-காமர்ஸ் மற்றும் இணையதளம் வளர்ந்திருக்கிறது. எந்த அளவுக்கு வசதியாக இருக்கிறதோ, அதே நேரத்தில் அதில் ஒரு சில பிரச்சினைகளும் இருக்கின்றன. நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்தால் வேறு ஒரு பொருள் வரும்.

உதாரணமாக ஆப்பிள் ஐஃபோன் ஆர்டர் செய்தவர்களுக்கு செங்கல், கற்கள் ஆகியவை கூட டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருள் கிடைக்கவில்லை, தவறான பொருள் வந்திருக்கிறது, ஆர்டர் செய்த பிராண்ட் இது கிடையாது என்று பல்வேறு புகார்களை எழுப்பி இருக்கின்றனர். ஆனால் இந்த நபர் தனக்கு டெலிவரி செய்யப்பட்ட டிவியை பற்றி ஒரு வினோதமான புகாரை அளித்திருக்கிறார்.

சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் 8 சீரிஸ் TU8000 50இன்ச் டிவியை ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் வாங்கி இருக்கிறார். ஆனால் ஆன்லைனில் டெலிவரி செய்யப்பட்ட அந்த டிவியை அளந்து பார்க்கும் பொழுது 44 இன்ச் தான் இருந்திருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் டிவி பேக் செய்யப்பட்டு வந்த பாக்ஸின் அளவும் 49 இன்ச் தான் இருந்திருக்கிறது. எனவே அந்த ஏமாந்து போயிருக்கிறேன் என்று ஒரு நபர் பதிவு செய்த ஃபீட்பேக்கின் ஸ்கிரீன்ஷாட் இணையம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சாம்சங் நிறுவ னம் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் போலியாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு டெலிவரி செய்யப்பட்டது 50 இன்ச் டிவி இல்லை என்பதை உறுதி செய்வதற்கு அவர் அந்த டிவியை அளந்து பார்க்கும் ஒரு புகைப்படத்தையும் சேர்த்திருக்கிறார். ‘50 இன்ச் டிவி ஆர்டர் செய்தேன், ஆனால் 44 இன்ச் டிவி தான் வந்திருக்கிறது. இந்த நிறுவனம் என்னை ஏமாற்றி இருக்கிறது’ என்று அந்த புகாருக்கு 642 யூசர்கள் பயனுள்ளதாக இருக்கிறது என்று லைக் செய்திருக்கிறார்கள்.

Also Read : உணவுகளின் விலை இவ்வளவு மலிவா..! -  பழைய பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.!

சரி உண்மையில் நடந்தது என்ன.? இவர் ஒரு குறிப்பிட்ட இன்ச் உள்ள டிவியை ஆர்டர் செய்து அதை அளந்து பார்க்கும் போது அதைவிட குறைவான அளவிலான தொலைக்காட்சி டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மைதானா.? இந்த வாடிக்கையாளர் உண்மையிலேயே நிறுவனத்தால் ஏமாற்றப்படவில்லை.! வாடிக்கையாளர் பதிவேற்றிய அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் டிவியை சரியான முறையில் அளவிடவில்லை என்பது தெரிகிறது.

வாடிக்கையாளர், டிவியின் நீளத்தை அளக்கும் போது, ஹாரிசாண்டலாக (ஸ்க்ரீனின் அகலத்தை நேராக) அளந்திருக்கிறார். ஆனால், உண்மையில் குறுக்கு வாட்டில் அளக்க வேண்டும். எனவே, குறுக்காக (diagonal measurement) அளவிடும் போது, அவர் வாங்கிய டிவியின் இன்ச் சரியாகத் தான் இருக்கிறது என்றும், சாம்சங் நிறுவனம் அவரை ஏமாற்றவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Also Read : புரூஸ் லீ மர்ம இறப்புக்கு இதுதான் காரணமா... 49ஆண்டுகள் கழித்து வெளியான ஆய்வு முடிவுகள்

இந்த வாடிக்கையாளரின் புகாருக்கு பலரும் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தும் வந்துள்ளனர்.

இப்படி தவறாக அளந்து பலரின் மனதிலும் தவறான விஷயத்தை பதிய வைத்த நபரின் புகாருக்கு ‘விரைவில் மனிதர்கள் பூமியில் இருந்து அழிந்து விடுவார்கள்’ என்று வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Online purchase, Online shopping, Samsung, Tamil News, Trending