டிவிட்டரில் பெண்கள் எப்படி? வெளியான சர்வே... சென்னை பெண்கள் அதிகம் பேசும் டாப்பிக் என்ன?

மாதிரி படம்

சென்னை பெண்கள் திரைப்பிரபலங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்து உரையாடுவதாக கூறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமூகமாற்றம், சவால் மற்றும் இலக்குகள் குறித்து இந்திய பெண்கள் டிவிட்டரில் அதிகம் கருத்துகளை பதிவிடுவதாக தெரிவித்துள்ள ட்விட்டர், சென்னை பெண்கள் திரைப்பிரபலங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்து உரையாடுவதாக கூறியுள்ளது.

இந்திய பெண்கள் ட்விட்டரை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள 10 நகரங்களை சேர்ந்த ட்விட்டரில் உள்ள 700 பெண்கள் மற்றும் ஜனவரி 2019 முதல் பிப்ரவரி 2021 வரை பெண்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள 522,992 ட்விட்டுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. தங்களுக்குரிய தனித்துவமான எண்ணங்களை பெண்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.39 %பெண்கள் ட்விட்டர் தளத்தை கருத்து சுதந்திரம் வழங்கும் இடமாக பார்க்கிறார்கள் என ட்விட்டர் கூறியுள்ளது. அழகு குறிப்புகளும், விருப்பங்களும் பெண்கள் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளாக இருந்துள்ளன.

24.9% பெண்கள், விருப்பங்கள், பொழுதுபோக்கு குறித்து பேசியுள்ளனர். 41 விழுக்காட்டினர் புதிய விருப்பங்களை ட்விட்டரில் கண்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஷன் 30%, புத்தகம் 28%, அழகு 25%, திரைப்படங்கள் மற்றும் டிவி 21%, இசை 18%, உணவு 18%, தொழில்நுட்பம் 17%, கலை 17% மற்றும் விளையாட்டு 14% என விவாதித்துள்ளனர். விமர்சன ரீதியான கருத்துகளை டெல்லி, பெங்களூரு, கவுகாத்தி நகரங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 6.9 விழுக்காடு பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

அதாவது, வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, சிங்கிள் மதராக இருப்பது உள்ளிட்ட தனிப்பட்ட சவால்கள் குறித்து பதிவிட்டுள்ளனர். நகரங்களின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பெண்கள் திரைப் பிரபலங்களின் செயல்பாடுகள், கிரியேட்டிவிட்டி மற்றும் அன்றாட அரட்டைகளில் அதிக பதிவுகளை பதிவிட்டுள்ளனர். சமூக மாற்றம் குறித்து டிவிட்டரில் பெங்களூரு நகர பெண்கள் அதிக கருத்துகளை விவாதித்துள்ளனர். இலக்குகள், அன்றாட தகவல்கள் மற்றும் விருப்பங்கள் குறித்து கவுகாத்தி பெண்கள் பேசியுள்ளனர்.

Also read... நாயை ஓநாய்போல காட்ட முயன்ற சீன மிருகக்காட்சிசாலை - நெட்டிசன்கள் எதிர்ப்பு!

ட்விட்டரில் இருக்கும் பெண்களைப் பற்றிய புரிதலை தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வு, சுவாரஸ்யமாகவும், ஈர்க்கும் வகையில் இருப்பதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. அவர்களின் சமூகம பார்வை தெரியப்படுத்தும் சாதனமாக ட்விட்டர் இருப்பதை உணர முடிந்ததாக கூறியுள்ள ட்விட்டர், சேவையின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இணையத்தை எளிதாக அடையக்கூடிய வகையில் இருப்பதால், எந்த தடைகளும் இன்றி பெண்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க முடிவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மதுரை மற்றும் மும்பையைச் சேர்ந்த பெண்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகளவில் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லாக்டவுன் காலத்தில் உணவு மற்றும் சேலைகள் குறித்து மும்பை மற்றும் சென்னை நகர பெண்கள் விவாதித்தாகவும் டிவிட்டர் கூறியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: