ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

WATCH | மழை வெள்ளத்தில் புதுமண தம்பதிகள்.. வைரல் வீடியோ..!

WATCH | மழை வெள்ளத்தில் புதுமண தம்பதிகள்.. வைரல் வீடியோ..!

மழை வெள்ளத்தில் புதுமண தம்பதிகள்

மழை வெள்ளத்தில் புதுமண தம்பதிகள்

கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  கடலூர் மாவட்டம் குப்பம்குளம் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், முழங்கால் அளவு தண்ணீரில் புதுமண தம்பதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

  கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலையில் மழைநீர் தேங்கிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

  இந்நிலையில் குப்பன்குளத்தை சேர்ந்த பிரசாந்த் - காந்திமதி ஆகியோருக்கு திருவந்திபுரம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமண முடிந்து வீடு திரும்பியபோது அவர்கள் வீட்டுப்பகுதி முற்றிலும் மழை நீரால் சூழப்பட்டது. அப்போது தேங்கிய மழைநீருக்கு மத்தியில் நடந்து வந்த அவர்களை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

  தமிழகத்தில் 17ஆம் தேதிவரை தொடர்மழை : வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட் (news18.com)

  கடலூரில் பொழிந்த கனமழையால் புதுமண தம்பதிகள் முழங்கால் அளவு நீரில் நடந்து சென்று வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Cuddalore, Trending Video