• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • CSK-வுக்காக ஆனந்த கண்ணீர்விட்ட சிறுமி .. பரிசு கொடுத்த தல தோனி

CSK-வுக்காக ஆனந்த கண்ணீர்விட்ட சிறுமி .. பரிசு கொடுத்த தல தோனி

காட்சி படம்

காட்சி படம்

சென்னை அணி வெற்றிப் பெற்றத்தை ஆனந்தக் கண்ணீர்விட்டு கொண்டாடிய சிறுமிக்கு, தோனி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

  • Share this:
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைப்பெற்றுவரும் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு முதல் அணியாக ஐ.பி.எல் தொடரை விட்டு வெளியேறிய சென்னை அணி, இந்த ஆண்டு கம்பீரமாக திரும்பியுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை அணி, முதல் குவாலிஃபையர் போட்டியில் டெல்லி அணியுடன் நேற்று மோதியது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்திவி ஷா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். அவருக்கு பக்கபலமாக அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், 51 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தனர்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது டெல்லி அணி. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாப் டூப்ளசிஸ் ஃபோல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய உத்தப்பா, ருத்ராஜூடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உத்தப்பா, தன்னுடைய கிளாசிக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருத்ராஜ்ஜூம் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறக்கூடிய சூழலில் சென்னை அணி இருந்த நிலையில், அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் தடுமாற்றத்தை சந்தித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஸ்ரெய்டில் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ராய்டு எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.

also read : சிறிய நீல நிற ஸ்டோனை கொடுத்து ஐஸ்கிரீம் கேட்ட சிறுமி - வைரலாகும் ட்விட்!

இந்த நேரத்தில், ஃபார்மில் இருக்கும் ஜடஜேவா உட்கார வைத்துவிட்டு தல தோனி முன்கூட்டியே களமிறங்கினார். ஆட்டத்தில் பரபரப்பு எகிறிக் கொண்டே சென்றது. இறுதியாக, தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி அபார வெற்றியைப் பெற்று, கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. தோனி, தான் சந்தித்த 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸூம் அடங்கும்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் பினிஷிங் மைதானத்தில் இருப்பவர்களையும் குதூகலிக்கச் செய்தது. சிறுமி ஒருவர், சென்னை அணி வெற்றிப் பெற்றதும் சந்தோஷம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதனை மைதானத்தில் இருந்த டிவியில் பார்த்த தோனி, அவருக்கு சர்பிரைஸ் பரிசு கொடுத்து அசத்தினார். அதாவது, தான் கையெழுத்திட்ட மேட்ச் பாலை, அந்த சிறுமிக்கு கொடுத்தார்.


தோனியின் இந்த செயல், மேட்ச் வின்னர் என்பதைத் தாண்டி, ரசிகர்கள் காட்டும் அன்புக்கு பாத்திரமாக அமைந்தது. டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், தோனியைக் கொண்டாடி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: