Home /News /trend /

முதலை வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்கிறான் என கிராம மக்கள் எடுத்த முடிவு... அடுத்து நடந்தது?

முதலை வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்கிறான் என கிராம மக்கள் எடுத்த முடிவு... அடுத்து நடந்தது?

 முதலையை கட்டிப்போட்ட கிராம மக்கள்

முதலையை கட்டிப்போட்ட கிராம மக்கள்

சிறுவனை முதலை விழுங்கியதாக நினைத்த கிராமவாசிகள், முதலை அசைய முடியாதவாறு அதனுடைய காலை கட்டிப் போட்டுள்ளனர்.

    பாதுகாப்பான தொலைவில் இருந்து பார்க்கும் போதே, அச்சுறுத்தக்கூடும் விலங்குகளில் ஒன்று முதலை. அதுவும் முதலை பிற விலங்குகள், இளம் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விழுங்கும்  வீடியோக்கள் அப்படியே உறைய வைக்கும். அவ்வாறான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 7 வயது சிறுவனை ஒரு முதலை முழுங்கியுள்ளது என்று போபாலில் சம்பல் ஆற்றங்கரையோரம் உள்ள ஷியூபோர் கிராம வாசிகள் முதலையைப் பிடித்துள்ளனர். ஆனால், அடுத்து திடுக்கிட வைக்கும் விஷயங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி விருகின்றது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோபாலின் ஷியோபூர் என்ற கிராமத்தில் சம்பல் ஆற்றங்கரையில் ஏழு வயது சிறுவனான அன்டார் சிங் தன்னுடைய நண்பர்களுடன் குளிக்க சென்றிருக்கிறான். அந்த சிறுவன் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு முதலை அவனை தாக்கியது. அதன் பிறகு அவனை வாயில் கவ்விக்கொண்டு எடுத்து செல்ல முயன்றது. முதலை தாக்கியதை உணர்ந்த சிறுவன் உடனடியாக உதவி வேண்டி, கத்த துவங்கினான். அவருடைய அலறல் குரலைக் கேட்டு ஓடி வந்த நபர்கள் வலை மற்றும் கயிறுகளை வீசி முதலையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    கோபமடைந்த கிராமத்தினர் பலர் ஒன்று கூடி சிறுவனை மீட்கும் முயற்சியாக, முதலையை கயிறுகளால் கட்டி தரைக்கு இழுத்து வந்தனர். முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு தான் இருக்கிறான் என்று நம்பி அவன் பெயரை அனைவரும் கூறி கொண்டிருந்தனர். மேலும், முதலையின் வயிற்றில் உயிருடனிருக்கும் சிறுவன் பதில் கூறுவான் என்று கிராமத்தினர் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு கொண்டிருந்தனர். ஆனால் போலீசாரும், வனத்துறையினரும் அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று கிராமவாசிகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.



    சிறுவனை முதலை விழுங்கியதாக நினைத்த கிராமவாசிகள், முதலை அசைய முடியாதவாறு அதனுடைய கால்களையும் வாய்ப் பகுதியையும் கயிறுகளால் இறுக்கமாக கட்டி விட்டனர். இதனால் வயிற்றில் இருக்கும் சிறுவனுக்கு எதுவும் நேராது என்றும் நம்பினார்கள். அனைத்துமே சிறுவனை காப்பாற்றுவதற்காகத்தான் என்று கிராமத்தினர் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

    Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

    ஆனால், உண்மையான நிலவரம் என்ன என்று சொல்லி புரிய வைப்பதற்கு வனத்துறை அதிகாரிகளுக்கு சில மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு தான் அவர்கள் முதலையை விடுவித்தனர். முதலை வாயில் சிறுவன் அகப்படவில்லை என்றால், அடுத்ததாக அச்சிறுவன் எங்கே என்ற கேள்வி எழுந்தது.

    அந்த சிறுவன் முதலில் தாக்கிய அதிர்ச்சியில் ஆற்றிலேயே எங்கோ விழுந்து, மீண்டு வர முடியாமல் பரிதாபமாக இறந்திருக்கிறான். அடுத்த நாள் காலையில் ஆற்றங்கரையில் அவனுடைய உடல் மீட்கப்பட்டு, இறுதி சடங்கிற்காக சிறுவனின் உடல் அவனது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி