மிகவும் பிரபலமான விக்டோரியா ஏரி, ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரியும் இதுதான். இங்கு ஒசாமா பின்லேடன் என்ற 75 வயதான நைல் முதலை ஒன்று உள்ளது. சமீப காலமாக இந்த முதலை ஏரியின் அருகிலுள்ள கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்களை கொன்று சாப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள இந்த முதலைக்கு ஒசாமா பின்லேடன் என்று பெயரிடப்பட்டது.
மேலும் 1991 மற்றும் 2005க்கு இடையில் லுகங்கா எனும் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குழந்தைகள் உட்பட அதன் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியைக் கொன்றதற்கு இந்த முதலையே காரணம் என டெய்லி ஸ்டார் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அந்த பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த கொடிய முதலை தனது வாழ்நாளின் பெரும்பகுதியை விக்டோரியா ஏரியில் தான் கழித்து வருகிறது. மேலும் ஏரிக்கு தண்ணீர் எடுக்க வரும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை பலமுறை தாக்கியுள்ளது. இந்த முதலை நீரிலிருந்து வெளியேறி மீனவர்களின் படகுகளில் குதித்து மக்களைப் பயமுறுத்தியும் உள்ளது.
Also Read : 'லேடி பாகுபலி' இது வேற லெவல் உடற்பயிற்சி... வைரலாகும் வீடியோ
மேலும், தனது பசிக்காக சிலரை கொன்று தண்ணீருக்கடியில் இழுத்து செல்வதும் உண்டு. இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவத்தில், மீனவர் ஒருவர் ஒசாமா முதலையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த மீனவரின் கிழிந்த உடைகள் தண்ணீரில் மிதப்பதைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் உயிர்பிழைத்த பவுல் என்பவர், தனது சகோதரருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி விளக்கினார். இதுகுறித்து சிட்னி மார்னிங் ஹெரால்டுடன் பேசும்போது, "நானும் எனது சகோதரரும் மீன்பிடிக்க படகில் சென்ற போது, எனது சகோதரர் படகின் பின்புறத்தில் அமர்ந்தபடி படகை செலுத்தி வந்தார்.
நாம் படகின் முன்பகுதியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒசாமா படகின் அருகில் வந்து எனது சகோதரனை இழுத்துச் சென்றது. அது எனக்கு மிகவும் பயங்கரமான நாள். அப்போது ஒசாமா தண்ணீரில் செங்குத்தாக குதித்து, படகின் பின்புறத்தை மூழ்கடித்தது. பின்னர் தண்ணீரில் விழுந்த எனது சகோதரர் பீட்டரின் காலை கவ்வி, அவரை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. ஆனால், பீட்டர் மீண்டும் படகில் ஏற முயற்சி செய்தார். சுமார் ஐந்து நிமிட போராட்டத்திற்குப் பிறகு, எனது சகோதரரின் கண்ணீர் சத்தம் மட்டும் எனக்கு கேட்டது.
Also Read : முதலையிடம் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற இளம் பெண் செய்த காரியம்!
முதலை தனது காலை உடைத்துவிட்டது என்று எனது சகோதரர் கூச்சலிட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு முதலை பீட்டரை கவ்விக்கொண்டு தண்ணீருக்கடியில் இழுத்து சென்றது. சில நாட்களுக்குப் பிறகு பீட்டரின் தலை மற்றும் கை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது" என வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டில் இந்த மிருகத்தனமான முதலையிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி கிராமவாசிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சுமார் 50 உள்ளூர் வாசிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து 7 இரவு மற்றும் 7 பகல் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முதலை ஒசாமா கைப்பற்றப்பட்டது.
Also Read : இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய வகை பிரமாண்ட பறக்கும் அணில்கள்
இப்போது, இந்த முதலை உகாண்டா க்ரோக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சொத்து ஆகும். இந்த நிறுவனம் முதலை தோல் கொண்டு கைப்பைகளை உருவாக்கி இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் ஒசாமாவின் தலைவிதியை விமர்சித்துள்ள நிலையில், லுகங்கா கிராமவாசிகள் அதிகாரிகள் அதை இலகுவாக விட்டுவிட்டதாக நம்புகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crocodile, Osama bin Laden