ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கரையில் இருந்த கோழி, வாத்து... பதுங்கி வேட்டையாடிய முதலை.. எது தப்பியது தெரியுமா? வைரலாகும் வீடியோ

கரையில் இருந்த கோழி, வாத்து... பதுங்கி வேட்டையாடிய முதலை.. எது தப்பியது தெரியுமா? வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video | முதலையொன்று ஒரு குளத்தின் கரையில் நிற்கும் கோழி, வாத்து நிற்க தண்ணீரில் பதுங்கி வந்து வாத்தை மட்டும் வேட்டையாடும் வீடியோ தான் அது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உங்களுக்கு பிளாக் வாட்டர் படம் நினைவிருக்கிறதா? சதுப்பு நிலங்களுக்குச் செல்லும் ஒரு குடும்பத்தை முதலை ஒன்று வேட்டையாடும். முதலை எவ்வளவு ஆபத்தானது என்பதன் உண்மையான சித்தரிப்புதான் இப்படம். இப்படி புத்திசாலித்தனமாக சத்தமில்லாமல் தங்கள் இரையை பதுங்கி திடீரென தாக்கி முதலைகள் வேட்டையாடும்.இப்படி நிஜத்தில் வேட்டையாடும் முதலை வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம்.

  அப்படியொரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலையொன்று ஒரு குளத்தின் கரையில் நிற்கும் கோழி, வாத்து தண்ணீரில் பதுங்கி வந்து வாத்தை மட்டும் வேட்டையாடும் வீடியோ தான் அது.

  Read More : கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

  இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், முதலை இரக்கமின்றி வாத்தை வேட்டையாடுவதைக் காணலாம். அங்கு இருக்கும் ஒரு கோழி மட்டும் தப்பித்து அப்படியே நிற்கும்.

  ஏன் கோழியை அது வேட்டையாடவில்லை எனக்கேட்டால் முதலைகள் பொதுவாகவே குறி வைத்து பதுங்கி தாக்குவதில் திறமையுடையது. இந்த வீடியோவில் முதலையின் கவனம் கோழி மீது இல்லை அதன் முன்னால் நின்ற வாத்தின் மீது தான் இருந்தது. அதனால் கோழி எளிதில் தப்பி விட்டது.


  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது. முதலையின் பிடியில் இருந்து தப்பித்த கோழியின் அதிர்ஷ்டத்தை பற்றி பலர் கமெண்டுகளை வாரி வழங்கினர். இப்படி பல கமெண்டுகளை தன் வாழ்கையோடு ஒப்பிட்டு பார்த்து யூசர்கள் வழங்கி வருகின்றனர்.

  இதுவரை, வீடியோ 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 84k க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Trending Video, Viral Video