ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Viral | சிங்கங்களுடன் தனது உயிரை காக்க போராடிய முதலை.! வைரல் வீடியோ

Viral | சிங்கங்களுடன் தனது உயிரை காக்க போராடிய முதலை.! வைரல் வீடியோ

Source - Instagram

Source - Instagram

Viral Video | காட்டின் ராஜாவான சிங்கத்தின் வலிமையை எதிர்கொள்வது எளிதானது அல்ல. பொதுவாக சிங்கங்களைக் கண்டால் அனைத்து விலங்குகளும் பயப்படும். அவை கூட்டமாக வந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து சிங்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காடுகளுக்கு என்று எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அது வலிமையானவர்கள் நீண்ட காலம் வாழலாம் மற்றும் பலவீனமானவர்களின் வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பது தான். பொதுவாக காட்டில் உள்ள விலங்குகள் தங்கள் பசியை போக்கிக்கொள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி பசியாறும். காட்டின் ராஜாவான சிங்கம் தேர்ந்தெடுக்கும் எந்த விலங்கையும் வேட்டையாடலாம் மற்றும் சாப்பிடலாம்.

காட்டின் ராஜாவான சிங்கத்தின் வலிமையை எதிர்கொள்வது எளிதானது அல்ல. பொதுவாக சிங்கங்களைக் கண்டால் அனைத்து விலங்குகளும் பயப்படும். அவை கூட்டமாக வந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து சிங்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மான் போன்ற மென்மையான விலங்குகள் முதல் காட்டு எருமை மற்றும் தண்ணீரில் இருக்கும் முதலை வரை வேட்டையாடுவதில் சிங்கங்கள் பின்வாங்குவதில்லை. ஆனால் சிங்கத்தால் முதலையை தனியாக வேட்டையாட முடியாது. ஏனெனில், முதலை மிகவும் பெரியது மற்றும் சிங்கத்தால் தோற்கடிக்க முடியாத சக்தி வாய்ந்தது. ஆனால் இங்கே 3 சிங்கங்கள் தங்கள் பசியை போக்க முதலையை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், சிங்கக் கூட்டத்திற்கும், முதலைக்கும் இடையே கடுமையான சண்டை நடைப்பெறுகிறது. முதலில் ஒரு சிங்கம் முதலையை வேட்டையாட அதனுடன் சண்டையிடுகிறாது. ஆனால், முதலையும் தனது உயிரை காத்துக்கொள்ள சிங்கத்தை பலம்கொண்ட மட்டும் எதிர்த்து போராடுகிறது. எனவே அந்த சிங்கத்தால் தனியாக போராடமுடியவில்லை. எனவே மேலும் இரண்டு சிங்கங்கள் தாவி குதித்து வந்து அந்த சிங்கத்துடன் இணைந்து முதலையை வேட்டையாட முயற்சிக்கிறது. ஆனால், முதலையானது சிங்கங்கள் முன் பணிவதற்கு பதிலாக, அவர்களுடன் சரிக்கு சமமாக சண்டையிடுவதை நம்மால் காணமுடிகிறது. முதலையின் எதிர்த்து போராடும் குணத்தை கண்டு திகைத்த சிங்கங்களும் முதலையை பிடிப்பதில் முனைப்புடன் போராடி கிட்டத்தட்ட வெற்றியடைந்த நிலையில் முதலையானது சிங்கங்களின் பிடியில் இருந்து தன்னை லாவகமாக விடுவித்துக்கொள்கிறது.
 
View this post on Instagram

 

A post shared by Lions Daily (@lionsdaily_)இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கடைசி வரை தனது உயிரை காத்துக்கொள்ள போராடும் முதலையின் விடா முயற்சியையும், தைரியத்தையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Crocodile, Lion, Trending, Viral Video