போர்ச்சுகல் நாட்டின் பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்க வைத்த ஒரே பெயர் கிறிஸ்டியானா ரொனால்டோ. கால்பந்து விளையாட்டில் உலகம் முழுவதும் சொல்லப்படும் வெகு சில உச்ச பெயர்களில் இவர் பெயரும் ஒன்று. கால்பந்து விளையாடத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரொனால்டோ 800 கோல்கள் அடித்துள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும் தலைப்புச் செய்தி தான்.
அண்மையில் 38 வயதை பூர்த்தி செய்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தன் ரசிகர்கள் தன் மீது வைக்கும் அன்பிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர் ரொனால்டோ. அப்படி ஒரு ரசிகரின் அன்பை மதித்திருக்கும் ரொனால்டோவின் செயல் மிக நெகிழ்ச்சி மிக்க ஒன்றாக வைரலாகி வருகிறது. உலகின் மிக முக்கிய கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் அணிக்காக விளையாட வந்தார் ரொனால்டோ. கடந்த ஆண்டு இந்த அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது.
பின்னர் தொடர்ந்து சவுதிஅரேபியாவின் அல் நசீர் கால்பந்து அணிக்காக விளையாடுவதற்காக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,750 கோடி ரூபாய் சம்பளத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது ரசிகர் ஒருவரின் ஆசை இணையம் வழியாக அவருக்கு தெரியவந்தது. அதாவது அண்மையில் சிரியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டபோது தந்தையை இழந்த பத்து வயது சிறுவன் ஒருவனிடம், உனது ஆசை என்னவென்று ஊடகங்கள் கேட்டபோது, கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை தான் நேரில் சந்திப்பதே தனது ஆசை என்று கூறியிருக்கிறான்.
இந்த வீடியோ வைரலாக சுமார் 23 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இது பற்றி ரொனால்டோவுக்கு தெரிய வர அந்த சிறுவனைப் பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது அந்த சிறுவன் சிரியாவைச் சேர்ந்த நபில் சையீத் எனத் தெரிய வந்திருக்கிறது. உடனடியாக அந்த சிறுவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததோடு, தனது செலவில் அந்த சிறுவனை நேரில் வரவழைத்து அவனை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
فرحتك فرحه لي ...حفظ الله مولاي الملك وسمو سيدي القائد الملهم ولي العهد رئيس مجلس الوزراء والشعب السعودي الكريم والشكر للنجم العالمي الكبير... 🇸🇦❤️ pic.twitter.com/9G7ZjhJx8B
— TURKI ALALSHIKH (@Turki_alalshikh) March 3, 2023
சிறுவன் நபில் ரொனால்டோவை சந்தித்த பிறகு அவன் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள். அதோடு, இல் நசீர் கிளப்பிற்காக தான் விளைாயட இருக்கும் போட்டியை காண வருமாறு அந்த சிறுவனை அழைத்திருக்கிறார் ரொனால்டோ. கொடுக்க கொடுக்கத் தான் அன்பு பெருகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் ரொனால்டோ கால்பந்ததாட்டத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cristiano Ronaldo, Syria, Trending, Viral