Home /News /trend /

Cristiano Ronaldo : கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்த சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் வைரலாகும் ரொனால்டோவின் பழைய கோக் விளம்பரங்கள்

Cristiano Ronaldo : கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்த சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் வைரலாகும் ரொனால்டோவின் பழைய கோக் விளம்பரங்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஐரோப்பிய நாடுகளில் தற்போது யூரோ 2020 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூன் 14ம் தேதி அன்று யூரோ 2020 தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பையும், நிறுவனத்திற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

மேலும், அவர் தண்ணீர் குடிக்க பரிந்துரைத்தார். அவரது அந்த தரமான சைகைக்கு பிறகு இணையத்தில் பல ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில், பல ஆண்டுகள் முன்பு ரொனால்டோ அதே பிராண்டிற்கு சப்போர்ட் செய்வதை காட்டும் விளம்பரங்கள் மற்றும் கே.எஃப்.சி விளம்பரத்தில் தோன்றிய வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது யூரோ 2020 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்த்த அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூன்.14) ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகல் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது இருக்கையில் அமர்ந்த உடன் தனது மேசையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களையும் ஒதுக்கி வைத்து, பின்னர் தனக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை உயர்த்தி பிடித்து, "தண்ணீர் குடிங்க" என்று கூறினார்.

ALSO READ |  "படுக்கையில் இருந்த பேய்" விர்ச்சுவல் டூரில் அதிர்ச்சியடைந்த பெண்!

அவரது ஒரே ஒரு மூவ் சில நொடிகளில் உலகளவில் பெரிதும் பேசப்பட்டது. கோகோ கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு ‘தண்ணீர் குடியுங்கள்’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. ரொனால்டோவின் அந்த ஒற்றை வார்த்தையால் கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்தது.

மேலும் இது தொடர்பாக பல மீம்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பைக்கான போட்டியில், சீனாவில் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ரொனால்டோ நடித்த கோக் விளம்பரம் ஒன்று இப்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

ALSO READ | வித்தியாசமான அசைவின் மூலம் 'ஐ லவ் யூ' சொல்லும் இரண்டு வயது கிளி - நெட்டிசன்கள் வியப்பு!

அதில், எளிமையான சீன மொழியில் முத்திரை குத்தப்பட்ட கோக் கேன்களை பிடித்தவாறு போர்த்துகீசிய நட்சத்திரம் ரொனால்டோ ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருப்பார். குளிர்சாதன பெட்டியில் உள்ள ஐஸ் க்யூப் கொண்டு அவர் கால்பந்து விளையாடுவதை போன்று அந்த விளம்பரம் காட்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியில் கோகோ கோலா சின்னம் மற்றும் உலகக் கோப்பை கோப்பையின் படத்துடன் விளம்பரம் முடிவடைகிறது. தற்போது குறைந்த தரம் வாய்ந்த இந்த வீடியோ பதிப்பு யூடியூப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2008ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இந்த பழைய விளம்பரம் வெளிவந்த பின்னர் ஜுவென்டஸ் பாசாங்குத்தனத்தை முன்வைத்ததாக சமூக ஊடகங்களில் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  

ஆஸ்திரேலிய யூடியூபரான ஜேக் பக்லி என்பவர் ரொனால்டோவின் விளம்பரப் படங்களை ட்வீட் செய்திருந்தார். அதில், "கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோக் பிடிக்கவில்லையா?. இது அருவருக்கத்தக்கது. ஒருவேளை ஊதிய காசோலை வருவது நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்" என கேப்ஷன் செய்துள்ளார். இப்போது கோக் பானத்தை ஒதுக்கிய வைத்த அதே ரொனால்டோ ஏன் அப்போது கோக் விளம்பரத்தில் நடித்தார் என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

ALSO READ | மூக்கின் மூலம் செல்போன் இயக்கி, டிக் டாக்கில் டான்ஸ் வீடியோ பதிவிட்ட நாய் - வைரல் வீடியோ!

அதேபோல, ரொனால்டோ மிகவும் ஆரோக்கியமான, மற்றும் சத்தான உணவைப் பின்பற்றுபவர் என்று சிலர் கூறும் சமயத்தில், துரித உணவு பிராண்டான KFC விளம்பரத்தில் ரொனால்டோ நடித்த ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.2013ம் ஆண்டில் மத்திய கிழக்கில் KFC க்கான விளம்பரத்தில், அதில் ரொனால்டோ ஒரு பக்கெட் பிரைட் சிக்கனை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த விளம்பரம் KFCArabia YouTube சேனலில் ஒளிபரப்பானது.

ALSO READ | மண் குளத்தில் உருண்டு, புரண்டு சேற்றை தெறிக்க விட்ட யானை - வைரலாகும் வீடியோ!

கடந்த வாரம் ரொனால்டோ செய்த ஒரு சிறிய சைகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால், இவரின் பழைய விளம்பரங்கள் தற்போது வெளியாகி அவர் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cristiano Ronaldo, Viral

அடுத்த செய்தி