இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உள்ள பிரித்திவி ஷாவின் காதலியாக கூறப்படும் நடிகை பிராச்சியின் நடனங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கலக்கி வருகின்றன. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பாலிவுட் படங்களின் பாடல்களுக்கு அற்புதமாக நடனமாடி, அவர் பதிவு செய்து வருகிறார். பாலிவுட் உலகில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய சத்யமேவ ஜெயதே (Satyameva Jayate) படத்தின் தில்பார் பாடலுக்கு அவர் ஆடிய நடனம், தற்போது வைரலாகியுள்ளது.
சுஷ்மிதா சென் மற்றும் சஞ்சய் கபூர் நடிப்பில் வெளியான தில்பார் பாடல் தற்போது அந்த பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ரீமேக் செய்யப்பட்ட பாடலை நேகா கக்கார், த்வானி பானுஷாலி, இக்கா ஆகியோர் சூப்பராக பாடியுள்ளனர். நோரா ஃபதே இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாப்புலராக இருக்கும் இந்த பாடலை தேர்வு செய்து நடனமாடியுள்ள பிரித்திவியின் தோழி பிராச்சியின் வீடியோ பெரிய ஹிட்டாகியுள்ளது.
நடன அசைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பிராச்சி -
பிரித்திவி ஷா தொடர்பான வதந்தியானது கடந்த 2020ம் ஆண்டில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இருவரும் செய்துகொள்ளும் நகைச்சுவையான ரிப்ளை, காதலர்கள் என்ற வதந்திக்கு காரணமாக உள்ளது. பிராச்சி தொடர்ந்து
பிரித்திவி ஷாவை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில், அகமதாபாத் நகரில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், டெல்லி அணிக்காக விளையாடிய
பிரித்திவி ஷா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கொல்கத்தா அணியின் பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்ட அவர், 41 பந்துகளில் 82 ரன்களை குவித்து டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு பிரித்திவி ஷாவின் பேட்டிங்கை பலரும் பாரட்டினர். ஆட்டநாயகன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அந்தப்போட்டியில் அவருக்கு வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு பிரித்திவி ஷா பேசிய விடியோ மற்றும் அவர் பெற்ற விருதுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிராச்சி, பிரித்திவி வெற்றி பெற்ற பரிசுகளை எடுத்துச் செல்ல தனி சூட்கேஸ் வேண்டும் என நகைச்சுவையாக எழுதியிருந்தார்.
அவரின் இந்தப் பதிவு மீண்டும் இணையத்தில் வைரலானது.
பிரித்திவி ஷா மற்றும் பிராச்சி தரப்பில் இருந்து அவர்கள் காதல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், நெட்டிசன்கள் அவர்கள் இருவரும் உறுதியாக காதலிப்பதாக தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களின் யூகங்களுக்கு ஏற்ப நடிகை பிராச்சி சிங்கின் பதிவுகளும் உள்ளன. தங்களின் காதல் குறித்து
பிரித்திவி ஷா மற்றும் பிராச்சி சிங் ஆகிய இருவரும் விரைவில் மௌனம் கலைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.