Home /News /trend /

ப்பா... இந்த வயசிலும் இப்படியொரு எனர்ஜியா?... கிரிக்கெட் விளையாடி கலக்கிய முதியவர்!

ப்பா... இந்த வயசிலும் இப்படியொரு எனர்ஜியா?... கிரிக்கெட் விளையாடி கலக்கிய முதியவர்!

கிரிக்கெட் விளையாடி கலக்கிய முதியவர்

கிரிக்கெட் விளையாடி கலக்கிய முதியவர்

Viral Video India : முதியவர் ஒருவர் குழந்தை தனம் மாறாமல் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முதியவர் ஒருவர் குழந்தை தனம் மாறாமல் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வயதாக, வயதாக முதியவர்களுக்குள் ஒரு குழந்தை தனம் எட்டிப்பார்ப்பது இயல்பான ஒன்று. 60, 70 ஆண்டுகளாக சேர்த்து வைத்த அனுபவங்களின் புதையலான முதியவர்களை உற்றுநோக்கினால் அவர்களிடம் மீண்டும் அதே குழந்தையின் குறும்பு தனங்கள் எட்டிப்பார்ப்பதை பார்க்கலாம்.

வயதாகிவிட்டது என்றாலே முதியவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். வீட்டின் ஒரு மூலையில் இடம் கொடுத்து, 3 வேலை சாப்பாடு போட்டால் போதும் அவர்கள் மீதமுள்ள காலத்தை கழித்துவிடுவார்கள் என்ற எண்ணம் அவர்களது உறவுகளிடையே உள்ளது. தனி அறை, டி.வி., 3 வேளை சாப்பாடு, மருந்து மாத்திரை, மாதம் ஒருமுறை மருத்துவர் பரிசோதனை இதை எல்லாம் செய்கிறோமே போதாதா? அதுக்கு மேல் வயசானவர்களை எப்படி சந்தோஷமா வச்சிக்க முடியும் என சிடுசிடுப்பவர்களை, வாய் பிளக்க வைத்திருக்கிறது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று.

இதையும் படியுங்கள் : கணவரை ஏலத்துக்கு விட்ட பெண், ரிட்டன் கிடையாது என கன்டிஷன்...!

காட்மேன் சிக்னா என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், 80 வயது முதியவர் ஒருவர் கையில் பேட் உடன் களம் இறங்குகிறார். அசால்ட்டாக பேட்டை சுழற்றி பந்தை ஓங்கி அடித்துவிட்டு, சற்றும் தளர்வில்லாமல் இரண்டு ரன்கள் ஓடுகிறார். அதன் பின்னர் தனது பேட்டை தரையில் போட்டுவிட்டு, ரன் ஓடிய மகிழ்ச்சியில் பொக்கை வாய் முழுவதும் சிரிப்பாக நடனமாடுகிறார். 14 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை பார்க்கும் போது, நமக்கும் அந்த முதியவரின் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

 

  

 

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த ட்விட்டர் வீடியோவை இதுவரை 4 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும், தாத்தாவின் எனர்ஜி லெவலுக்கு ஈடு இணை இல்லை என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இன்னும் சிலர் ‘இப்படிப்பட்ட மகிழ்ச்சியை நாம் எங்கும் பார்க்க முடியாது. இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் கிரிக்கெட் கிடைத்தது நமக்கு வரம்’ என கமெண்ட் செய்துள்ளனர். விளையாட்டுக்கு வயது ஒரு தடையல்ல, அது தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது என்பதை வீடியோவில் தோன்றும் முதியவர் நிரூபித்து காட்டியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்த சாகசம்.! வைரலாகும் பழைய வீடியோ..

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 97 வயதான லியோனிட் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடாலுடன் டென்னிஸ் விளையாடினார். இந்த விளையாட்டின் வீடியோ இணையத்தில் செம்ம வைரலானது. இதையடுத்துசர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF) உரிமம் பெற்ற உலகின் மிக வயதான வீரர் என்ற கின்னஸ் உலக சாதனையை உக்ரைன் வீரர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி