முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரு துண்டு பிரெட்டில் இப்படி ஒரு ஓவியமா! வைரல் வீடியோ..

ஒரு துண்டு பிரெட்டில் இப்படி ஒரு ஓவியமா! வைரல் வீடியோ..

காட்சி படம்

காட்சி படம்

ஜப்பானை சேர்ந்த ஆர்ட்டிஸ்டான மனாமி சசாகி டோஸ்ட் செய்யப்பட்ட பிரெட் ஸ்லைஸ்களில் அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்குகிறார்.

உணவுகளை கண்கவரும் வகையில் வித்தியாசமாக தயார் செய்வது என்பது சமீப காலமாக ட்ரெண்டாகி வரும் ஒன்றாக உள்ளது. நல்ல சுவையுடைய உணவாக இருந்தாலும் கூட அதை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் தயார் செய்து வைப்பது என்பதில் அதாவது Food presentation-ல் இன்று பல சமையல் வல்லுநர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலை வடிவமைப்புகள் பார்ப்பதற்கு நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கின்றன. இதனிடையே பிரட் டோஸ்டில் உருவாக்கப்பட்ட தனது தனித்துவமான கலையின் காரணமாக ஜப்பானிய கலைஞர் ஒருவர் ஆன்லைனில் பிரபலமாகி வருகிறார். பிரமிக்க வைக்கும் சில கலை படைப்புகளை உருவாக்க அந்த ஜப்பானிய கலைஞர் தனது கேன்வாஸாக பிரெட் ஸ்லைஸ்களை பயன்படுத்தி உள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஆர்ட்டிஸ்டான மனாமி சசாகி (Manami Sasaki), டோஸ்ட் செய்யப்பட்ட பிரெட் ஸ்லைஸ்களில் அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்குகிறார். அவரது படைப்புகளின் போட்டோக்கள் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்ஸ்டாவில் @sasamana1204 என்ற பெயரில் இருக்கும் ஜப்பானிய கலைஞர் மனாமி சசாகி தனது அற்புதமான படைப்புகளுக்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார். ஃப்ரிடா கஹ்லோ முதல் அழகிய நிலப்பரப்புகள் வரை, கார்ட்டூன்கள் முதல் ஜப்பானிய பெண்கள் வரை அனைத்தையும் பிரெட்டில் பெயிண்ட் செய்து பிரபலமடைந்து உள்ளார் இவர்.

அவர் தனது டோஸ்ட்களை டாப் அப் செய்ய மென்மையாக வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறார். இவர் உருவாக்கும் ஸ்டைலான கலை படைப்புகள் நெட்டிசன்களிடையே அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளன. பிரெட் ஸ்லைஸ்களை கேன்வாஸாக பயன்படுத்தி செய்யப்பட்ட நுட்பமான மற்றும் அழகான இவரது படைப்புகளை சோஷியல் மீடியா யூஸர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

also read : இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!

சமீபத்தில் மனாமி சசாகி, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதி திரைப்பட சகாப்தத்தில் சிறந்த ஒரு நடிகையாக இருந்த மேரி டோரோவின் ஆர்ட்டை பிரெட் ஸ்லைஸில் squid ink பயன்படுத்தி பெயிண்ட் செய்துள்ளார். இந்த போட்டோவை ஷேர் செய்துள்ள அவர், ஸ்க்விட் இங்க் பற்றி வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அதை வறுக்கும் போது, ​​அது பழைய புகைப்படம் போல தோற்றமளிக்கத் தொடங்குகிறது! ஸ்க்விட் மையின் செழுமையான நறுமணம் தவிர்க்க முடியாதது.. என்று குறிப்பிட்டு உள்ளார். சில மாதங்களுக்கு முன் ஜப்பானில் லாக்டவுன் போடப்பட்ட போது வித்தியாசமான இந்த தனது கலை படைப்புகளை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய துவங்கி இருக்கிறார் மனாமி சசாகி என்பது குறிப்பிடத்தக்கது.

also read : பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு


லாக்டவுனின் போது அதிகாலையில் எழுந்து என்னை உற்சாகப்படுத்தும் ஒரு காலை வழக்கத்தை உருவாக்க விரும்பினேன். அப்போதுதான் காலை உணவுக்கான டோஸ்ட் ஆர்ட்டை நான் செய்ய துவங்கினேன் என்று பேட்டி ஒன்றில் மனாமி கூறி உள்ளார்.

First published:

Tags: Trending