ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் படம்! இதை உற்று பார்த்து பதில் சொன்னால் நீங்கள் கில்லாடி தான்

உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் படம்! இதை உற்று பார்த்து பதில் சொன்னால் நீங்கள் கில்லாடி தான்

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | இந்த புகைப்படத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளுக்கு நடுவில் ஒரு பச்சை புள்ளி உள்ளது, அதில் நமது கவனத்தை முழுமையாக செலுத்தினால், கோடுகள் ஒரே நேரத்தில் விரிவடைந்து சுருங்குவது போல் தோன்றும்.

நாம் பார்க்கும் விதத்தை மாற்ற கூடிய ஒளியியல் மாயைகள் என்கிற ஆப்டிகல் இலுஷன் பற்றிய தேடல்களில் மனித மூளை எப்போதும் ஆர்வமாக உள்ளது. பல நேரங்களில் நாம் பார்க்க கூடிய விஷயங்கள் வேறு சிலவற்றை நமது மூளைக்கு தோன்ற செய்யும். இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது இவற்றை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமக்கு வேற எதோ போன்று தோன்றும். அதையே அருகில் வைத்து பார்த்தால் அது வேறொன்று போன்று தோன்றும். இது போன்ற பல விஷயங்கள் இன்று இணையத்தில் வைரலாகி விடுகிறது.

நெட்டிசன்களுக்கு பொழுது போகவில்லை என்றால், இப்படிப்பட்ட எதாவது ஒரு ஆப்டிகல் இலுஷனை வைத்து கொண்டு அதில் பல ஆராய்சிகளை செய்து விடுவார்கள். இப்படியொரு வைரலான ஒன்றை பற்றி தற்போது நாம் பார்க்க போகிறோம். 2015 ஆண்டில் இணையத்தில் வைரலான முக்கிய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இது. இந்த கண்ணைக் கவரும் ஆப்டிகல் மாயை படமானது டிக் டாக்-இல் வலம் வந்தது. இது உங்களின் மூளையை ஏமாற்றி வேறொரு விஷயத்தை உங்கள் மூளைக்கு சொல்கிறது.

Also Read : வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை... ரிசல்ட்டை பார்த்து ஷாக்கான உலக நாடுகள்!

டிக் டாக் தளத்தில் 'The Card Guy Evan' என்பவர் பகிர்ந்த ஒரு வீடியோவில், சில நொடிகள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் பார்க்கும்படி கூறுகிறார். அதை உற்று பார்த்த பிறகு, உங்கள் வீட்டின் மேல் புறத்திற்கு அப்படியே கண்களை கொண்டு செல்ல வேண்டுமாம். அப்போது உங்களின் வீட்டின் மேற்பகுதி நகர்வதை நீங்கள் உணருவீர்கள் என்று கூறுகிறார். மேலும், இது சில நொடிகளுக்கு அனைவருக்கும் தலைசுற்றலை ஏற்படுத்த கூடிய ஒரு ஆப்டிகல் இல்யூஷனாகவும் உள்ளது.

ஆப்டிகல் புகைப்படம்

இந்த புகைப்படத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளுக்கு நடுவில் ஒரு பச்சை புள்ளி உள்ளது, அதில் நமது கவனத்தை முழுமையாக செலுத்தினால், கோடுகள் ஒரே நேரத்தில் விரிவடைந்து சுருங்குவது போல் தோன்றும். இதை செய்யும்போது பார்வையாளர்கள் தங்களது கண்களை மூட கூடாது. ஒருவேளை கண்களை மூடிவிட்டால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சரியான தாக்கத்தை ஏற்படுத்தாது.

இதை முயற்சி செய்த நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை பதிவு செய்து வந்தனர். அதில் ஒருவர், "இது விசித்திரமாகத் தெரிகிறது, உங்கள் திரையின் நடுவில் உள்ள புள்ளியை உற்றுப் பாருங்கள், நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் கண்களை மூட வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர் “அது நகர்வது போல் இருக்கிறது. இந்த மேஜிக் வேலை செய்கிறது." என்று கூறியுள்ளார்.

இது போன்று பலரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விசித்திரமாக உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இது எந்தவித மந்திரமும் இல்லை. ஆம், நம் கண்களுக்கு ஒரு மாயை படம் மூலம் மனதில் பதிய வைத்து அதை மாயை போன்று தோன்ற வைக்கிறது. எனவே, இந்தப் பரிசோதனையை முயற்சித்துப் பாருங்கள், இது உங்களுக்கும் அதிசயங்களை காட்டும்.

First published: