Home /News /trend /

Viral Video | விமானம் மீது ரயில் மோதி விபத்து.. நூலிழையில் தப்பிய விமானி

Viral Video | விமானம் மீது ரயில் மோதி விபத்து.. நூலிழையில் தப்பிய விமானி

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

Viral Video | பல போராட்டத்திற்குப் பிறகு, விமானியை எப்படியோ போலீசார் வெளியே இழுத்தனர். அவர்கள் அவரை மறுபுறம் இழுத்துச் சென்றனர், இதற்கிடையில் பின்னால் ரயில் கடந்து செல்லும் கிளிப்பை நீங்கள் பார்க்கலாம்

    ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி நூழையில் பலர் தப்பும் காட்சிகளை நாம் இதுவரை பாரத்திருப்போம். பேருந்து டயரில் சிக்கி தப்புவது போன்ற காட்சிகளில் ஒரிரு வினாடிகளில் ஒருவர் உயிர்பிழைக்கும் சம்பவங்கள் மனதை பதபதைக்க வைக்ககும். அதுப்போன்று தான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஞாயிற்றுக்கிழமை இதுப்போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இது உண்மையானது. இங்கு ஒரு விமானம் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து நொறுங்கியது மற்றும் அதன் பைலட் விமானத்திற்குள் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் மீட்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கலிபோர்னியாவின் பகோய்மாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட விமானம் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானம் கடுமையான சேதம் அடைந்து உடன் அதில் பயணித்த விமானியும் காயமடைந்துள்ளார்.

    Also Read : லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய இருவர்.. 10 வினாடியில் ஆட்டம் முடிந்தது

    விமானத்திற்குள் இருக்கும் விமானியை மீட்க போலீசார் கடுமையாக முயற்சிகின்றனர். அதே நேரத்தல் அந்த தண்டவாளத்தில் அதிவேகத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு விமானியை மீட்க போராடினார்கள். காயத்துடன் போராடும் விமானி ஒரு பக்கம் வேகமாக வரும் ரயில் ஒரு பக்கம் என்று போலீசார் திக்குமுக்கி ஆடிவிட்டனர்.



    பல போராட்டத்திற்குப் பிறகு, விமானியை எப்படியோ போலீசார் வெளியே இழுத்தனர். அவர்கள் அவரை மறுபுறம் இழுத்துச் சென்றனர், இதற்கிடையில் பின்னால் ரயில் கடந்து செல்லும் கிளிப்பை நீங்கள் பார்க்கலாம். விமானத்தின் இடிபாடுகளில் ரயில் போகும் வேகத்தை பார்த்தால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். போலீசார் விமானியை வெளியே இழுக்காமல் இருந்திருந்தால் பெரிய விபத்து நடந்திருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை, இந்தச் சம்பவத்தின் காணொளியைப் பகிர்ந்துள்ளதன் மூலம், காவல்துறையினரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளது.

     

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Trending Videos, Viral Video

    அடுத்த செய்தி