பசு மாடு லிட்டர் கணக்கில் பால் கறக்கணுமா..? ரஷ்யக்காரர்கள் செய்த டெக்னிக்கை பாருங்க..!

பசு மாடு லிட்டர் கணக்கில் பால் கறக்கணுமா..? ரஷ்யக்காரர்கள் செய்த டெக்னிக்கை பாருங்க..!
மாடு
  • News18 Tamil
  • Last Updated: November 28, 2019, 12:15 PM IST
  • Share this:
ரஷ்யாவில் மாடுகள் மகிழ்ச்சியாக இருக்கவும், அதிகமாக பால் கரக்கவும் புதுவிதமான டெக்னிக்கை கண்டறிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

மாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உடல் நலக் குறைவுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் பால் உற்பத்தியும் மந்த நிலையை எட்டியுள்ளது என்கிற டச்சு மற்றும் ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்தியுள்ளனனர்.
ரஷ்யாவின் கிராஸ்னோகோர்க் பால் பண்ணையைச் சேர்ந்த விவசாயிகள் மாடுகளுக்கு சில ஆய்வுகளை செய்துள்ளனர். இந்த ஆய்வு கால்நடைகள், ஆலோசகர்களுடன் இணைந்து அவர்களின் மேற்பார்வையில் நடத்தியுள்ளனர்.

அதாவது மாடுகளுக்கு மனிதர்கள் பயன்படுத்தும் விர்சுவல் ரியாலிட்டி (virtual reality) ஹெட்செட்டை மாடுகளுக்கு மாட்டியுள்ளனர். அதில் மாடுகளுக்கு ஏற்றவாறு மந்தமான நிழல்கள் கொண்ட உருவங்களை காண்பித்துள்ளனர். மாடுகள் மஞ்சள் மற்றும் நீலம் நிறத்தை மட்டுமே உணரும். சிவப்பு , பச்சையை உணராது. அதற்கு ஏற்ப வீடியோவை காண்பித்துள்ளதுனர்.

அப்போது மாடுகளிடம் மேம்பட்ட உணர்ச்சி மனநிலையும் மாடுகளுக்கே உரிய பதட்டம் இல்லாமல் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். இதனால் பாலும் அதிகம் கறப்பதை கண்டறிந்துள்ளனர்.

 

 
First published: November 28, 2019, 12:15 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading