முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஷாப்பிங் மாலை சுற்றிப்பார்க்க வந்த மாடு..! வைரலாகும் வீடியோ..!

ஷாப்பிங் மாலை சுற்றிப்பார்க்க வந்த மாடு..! வைரலாகும் வீடியோ..!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

சமீபத்தில் அசாமில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் பசு மாடு ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Assam, India

மனிதர்கள் எந்த அளவு வேடிக்கையான நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனரோ அதே அளவில் விலங்குகளும் பல செயல்களை செய்து வருகின்றனர். சுற்றுலாப்பயணிகளுடன் விளையாடும் யானை, ஏர்பாட்ஸ் தூக்கி சென்ற குரங்கு என பால வைரல் வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படியொரு காட்சிதான் இப்போதும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நெரிசலான தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிவது பொதுவான காட்சி. ஆனால் சமீபத்தில் அசாமில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் இருக்கும் துணிக்கடையில் பசு மாடு ஒன்று சுற்றித் திரிந்தது. டிசம்பர் கடைசி வாரத்தில், துப்ரியில் உள்ள ஒரு மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பசு மாடு ஒன்று மாலிற்குள் உள்ள துணிக் கடைக்குள் நுழைகிறது. பின்னர் துணிகள் இருக்கும் இடத்தில் சுற்றி வருகிறது. கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் பணிபுரிபவர்கள் கண்ணில் சிக்காத வரை ஜாலியாக சுற்றி வருகிறது. பின்னர் கவனித்தவுடன் அங்குள்ள துணிகளின் வழியே புகுந்து வெளியே ஓடி செல்கிறது.

First published:

Tags: Assam, Trending, Viral