கொரோனா தாக்கம்: ஜாடிகள், கொள்கலன்கள் பற்றாக்குறையால் விழி பிதுங்கி நிற்கும் சில்லறை விற்பனையாளர்கள்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கம் காய்கறிகள், ஊறுகாய் மற்றும் சாஸ்கள் ஆகியவற்றைப் சேகரிக்க பயன்படுத்தப்படும் ஜாடிகள் மற்றும் முடிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கம்: ஜாடிகள், கொள்கலன்கள் பற்றாக்குறையால் விழி பிதுங்கி நிற்கும் சில்லறை விற்பனையாளர்கள்
ஜாடிகள், கொள்கலன்களுக்கு பற்றாக்குறை! (படம்: Reuters)
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 8:59 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கம் காய்கறிகள், ஊறுகாய் மற்றும் சாஸ்கள் ஆகியவற்றைப் சேகரிக்க பயன்படுத்தப்படும் ஜாடிகள் மற்றும் முடிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

தோட்டக்காரர்கள் தாங்கள் விளைவித்த தக்காளி சாஸ்கள், சல்சாக்கள் மற்றும் வெள்ளரிகளை ஊறுகாய்களாக மாற்றுவதற்கான பருவம் இது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்திய தாக்கத்தினால் தோட்டக்கலை மற்றும் வீட்டிலேயே உணவு/ஊறுகாய் தயாரிக்கும் பணிகள் அவற்றைப் பாதுகாப்பதற்கான பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மைனே, வெர்மான்ட் முதல் லூசியானா மற்றும் மேற்கு வர்ஜீனியா வரை, தோட்டக்காரர்கள் சில குறிப்பிட்ட அளவிலான கண்ணாடி ஜாடிகளை பயன்படுத்தி ஊறுகாய்களை விற்பனை செய்து வருகின்றனர். அவற்றை பாதுகாப்பாக முத்திரையிட்ட மூடிகள் மற்றும் ஜாடிகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பதப்படுத்த தேவையான பொருட்களை ஆன்லைனில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள்ளனர்.


Also read: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இதுகுறித்து பேசிய மேற்கு வர்ஜீனியாவின் வனேசா வேர் என்ற விவசாய பெண், தனது தக்காளி, மிளகு, சோளம் மற்றும் சார்க்ராட் ஆகிய விளை பொருட்களை பதப்படுத்த பொருட்கள் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டதாகவும், அதற்காக கிட்டத்தட்ட அரை டஜன் கடைகளுக்குச் சென்றதாகக் கூறினார். அப்போது என்னிடம் போதுமான ஜாடி மற்றும் அதற்கான மூடிகள் இருந்தது. ஆனால் என்னிடம் பட்டைகள் இல்லை. அதனால் பல கடைகளுக்கு ஏறி இறங்கினேன். அப்போது ஆன்லைன் சில்லறை தளங்களில் விலை உயர்வு காரணமாக கடுமையான சிக்கல்களை சந்தித்தாக தகவல் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் அதிகமான காலத்தில் அதிகமானோர் வீட்டிலேயே உணவைத் தயாரிப்பதால், முழு பதப்படுத்துதல் தொழிற்துறையும் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றன என்று மேசன் ஜாடிகள் உற்பத்தி செய்யும் உரிமையாளரான நியூவெல் பிராண்ட்ஸின் கூறுகிறார். முடிந்தவரை விரைவாக பொருட்களை தயாரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டுள்ளன. பல நிறுவனங்கள் கண்ணாடி ஜாடி உற்பத்தியை அதிகரித்துள்ளன. மேலும் மூடி உற்பத்தியாளர்களை கண்டறிந்தது பழைய நிலையை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த பற்றாக்குறை வீட்டு உணவுப் பாதுகாப்பு தேசிய மையத்தின் திட்ட இயக்குநரான எலிசபெத் ஆண்ட்ரெஸை பதிலளிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. முன்பை விட அதிகமான மக்கள் ஜாடிகள், பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களின் தேவைகளுக்காக முன்பதிவு செய்துள்ளதாகவும், கடந்த காலங்களை விட தேசிய மையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மெய்நிகர் உணவு பாதுகாப்பு வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என ஜோர்ஜியா பல்கலைக்கழக பேராசிரியரும், உணவு பாதுகாப்பு நிபுணருமான ஆண்ட்ரஸ் கூறினார்.

Also read: கிளிகள் கூடு கட்டியிருப்பதால் சாகுபடியையே கைவிட்ட விவசாயி - நெகிழவைக்கும் சம்பவம்தொற்றுநோய்களின் போது மளிகை கடைக்குச் செல்வது குறித்த அச்சம் அல்லது உணவு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதிகமான மக்கள் தங்களது தோட்டங்களில் மூலப்பொருட்களை விளைவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே இருக்கும் இடங்களை விரிவுபடுத்தி விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

வெர்மான்ட் விரிவாக்க பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் கார்டன் ஹெல்ப்லைன் மார்ச் மாதத்தில் தோட்டக்காரர்கள், தோட்டங்களை விரிவுபடுத்துபவர்கள் மற்றும் தாவர நோய் பிரச்சினைகளுக்கு உதவி கோருபவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளது என ஹெல்ப்லைன் உதவியாளர், லிசா சவுனார்ட் கூறினார். "இதற்கு கொரோனா காரணமாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஏனெனில் அதிகமான மக்கள் தங்கள் சொந்த இடத்தில் அவர்களுக்கான உணவை வளர்க்க விரும்புகிறார்கள். அத்துடன் தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதப்படுத்தலுக்கு தனக்கு தேவையான சில பட்டைகளை கிடைத்தது. அது எனது மாமியார் இரண்டு மணி நேரம் தொலைவில் இருந்து வந்து அவற்றை என்னிடம் கொண்டு வந்தார். அவரால் அதிகமான பட்டைகளை பெற முடிந்தது. ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்திய பின்னரே பட்டைகள் 12 ஜாடிகள், மூடிகள் மற்றும் பட்டைகளை பெற முடிந்தது என மேற்கு வர்ஜீனியாவில் உள்ள வேர் என்பவர் தகவல் அளித்துள்ளார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading