கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்கள் இப்போது மேகாலயாவுக்கு மலிவான விலையில் டூர் செல்லலாம்!

கோப்புப் படம்

அனைவரையும் தடுப்பூசி எடுத்து கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு, மேகாலயாவை தளமாகக் கொண்ட ஒரு டிராவலிங் நிறுவனம் அற்புதமான டிராவல் பேக்கேஜை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாய் பரவி வரும் நிலையில், அனைவரையும் தடுப்பூசி எடுத்து கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. முதலில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட நிலையில், அதன் பின்னர் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இணை நோய் இல்லாத 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து பரவி வரும் தகவல்களால் பல மக்கள் தடுப்பு மருந்தை போட்டு கொள்ள இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பலரும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக சிலர் வெளிமாநில சுற்றுலா பயணங்கள் செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர்.

இதனிடையே தொற்றுக்கு எதிராக கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், வெளிமாநில ட்ரிப்பிற்கு செல்ல விரும்பினால் மேகாலயாவுக்கு தங்கள் பயணத்தை மலிவான விலையில் திட்டமிடலாம். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்காக மேகாலயாவை தளமாக கொண்டு இயங்கும் மேக்(Megh) என்ற டிராவல் நிறுவனம் Vax Trip என்ற டிராவல் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. 6 நாட்கள் மற்றும் 5 இரவுகள் கொண்ட இந்த பேக்கேஜின் விலை ரூ .19,495. இதில் விமான கட்டணமும் அடங்கும் என்று Megh நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் மேகாலயாவின் அமைதியான மற்றும் பசுமையான எழில் நிறைந்த மனஅமைதி தரும் பகுதிகளை காண்பிப்பதாக டிராவல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பயண திட்டப்படி முதல் நாள் தங்கள் சொந்த ஊரிலிருந்து வரும் பயணிகள் குவஹாத்தி விமான நிலையத்திற்கு வந்து சேருவார்கள். பின்னர் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிரபுஞ்சிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த பயணத்தில் உமியம் ஏரி( Umiam lake) மற்றும் கம்பீரமான மவ்க்டோக் டிம்பெப் வியூயிங் பாயிண்ட் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் அழகிய காட்சிகள் பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படும்.

Also read... ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

பின்னர் சிரபுஞ்சியில் ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடத்தில் இரவு உணவுடன் நாள் முடியும். பயணிகள் தங்கள் பயணத்தின் 2-வது நாளில் மழைக்காலங்கள் மற்றும் நோகலிகாய் நீர்வீழ்ச்சியில் உள்ள மர்மமான குகைகளுக்கு இடையே உள்ள ரம்யமான நீர்வீழ்ச்சிகள், செவன் சிஸ்டர்ஸ் நீர்வீழ்ச்சி, டைன்ட்லென் நீர்வீழ்ச்சி மற்றும் மனதை மயக்கும் அர்வா லும்ஷின்னா குகை உள்ளிட்டவைகளை கண்டு களிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்கெனஅமைக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ளூரில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் தேன் மற்றும் அம்மாநில உணவுகளுக்கு சுவை சேர்க்கும் மசாலா பொருட்களை நியாயமான விலையில் வாங்கி கொள்ளலாம். அடுத்த நாட்களில் சுற்றுலா பயணிகள் மவ்லின்நொங் கிராமம் ( Mawlynnong village), லிவிங் ரூட் பிரிட்ஜ் மற்றும் புனித வனமான மவ்லாங் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 நாள் பயணம் இறுதியாக குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமக்கியா கோவிலுக்கு பயணிகளை அழைத்து செல்வதுடன் முடிகிறது. பயணத்தின் விதிமுறைகளின்படி, இந்த பயணத்தை மேற்கொள்ள திட்டமிடும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒரு துணை / குடும்ப உறுப்பினருடன் இருக்க வேண்டும். முன்பதிவு செய்யும் முன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் பிட்னஸ் சான்றிதழை வழங்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: