Home /News /trend /

அவ்ளோ பெரிய கின்னஸ் சாதனையை அசால்ட்டாக செய்த ஜோடி - வைரல் வீடியோ

அவ்ளோ பெரிய கின்னஸ் சாதனையை அசால்ட்டாக செய்த ஜோடி - வைரல் வீடியோ

காட்சி படம்

காட்சி படம்

Trending | பைன் பலகைகள் ஒரு கையினால் வெறும் ஒரு நிமிடத்திலேயே உடைத்து உலக சாதனை புரிந்துள்ளனர் இந்த ஜோடி.

ஒவ்வொரு நாளும் பல விதமான உலக சாதனைகளை யாரோ சிலர் செய்து கொண்டே தான் வருகின்றனர். அவற்றில் பல நம்மை வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு ஆச்சரியமானதாக இருக்கும். அதே போன்று நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விநோதமானதாகவும் இருக்கும். அந்த வகையில் சில உலக சாதனைகள் விபரீதமானதாகவும் இருக்க கூடும். பெரும்பாலும் உயரமான இடத்தில் இருந்து செய்ய கூடிய உலக சாதனைகள், தனது உடலை வருத்தி செய்ய கூடிய சாதனைகள் பலவும் பயங்கரமானதாக இருக்கும்.

இருப்பினும் இது போன்ற உலக சாதனைகளை செய்வதற்கு முன்னர் பல முறை முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதே போன்று அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருவார்கள். உலக சாதனைகளில் பல வகைகள் உண்டு. தனி நபராக செய்ய கூடிய சாதனைகள் முதல் கூட்டாக செய்ய கூடிய சாதனைகள் வரை பல வகையாக உள்ளன. இதில் ஜோடியாக செய்ய கூடிய சாதனைகள் பார்ப்போரை இன்னும் கவர கூடியவையாக இருக்கும்.

அந்த வகையில் லிசா மற்றும் கிறிஸ் பிட்மேன் என்கிற ஜோடி சிறப்பான ஒரு உலக சாதனையை செய்துள்ளனர். இதை உலக கின்னஸ் சாதனை அமைப்பானது தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இது போன்ற பல வீடியோக்களையும், படங்களையும் கின்னஸ் உலக சாதனை அமைப்பானது பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி பைன் பலகைகள் ஒரு கையினால் வெறும் ஒரு நிமிடத்திலேயே உடைத்து உலக சாதனை புரிந்துள்ளனர்.



லிசா மற்றும் கிறிஸ் பிட்மேன் பைன் மர பலகைகளை மிக துரிதமாகவும், பளுவாகவும் உடைத்த போது எடுத்த வீடியோவை கின்னஸ் அமைப்பானது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பதிவில் சாதனை படைத்தவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். "பவர் ஜோடி லிசா மற்றும் கிறிஸ், யு.கே உள்ள ப்ரோம்லியில் இருந்து. இவர்கள் டேக்வாண்டோ பயிற்றுனர்கள். உடைத்த மொத்த பலகைகள்: கிறிஸ் - 315 மற்றும் லிசா - 230, ”என்கிற விரிவான தகவல்களையும் பகிர்ந்திருந்தனர்.

also read : டிரீம் ஜாப்புக்கான விண்ணப்பத்தில் பாலியல் பரிசோதனை ரிப்போர்ட்டை இணைத்த இளைஞர்!




அடுக்கப்பட்ட பைன் பலகைகளை ஒன்றின் பின் ஒன்றாக உடைத்து அசத்தி உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு கையை பயன்படுத்தி இந்த பலகையை உடைத்து சாதனை செய்துள்ளனர். இதற்கு பின்னர் தங்களின் சாதனையை குறித்து 'பவர் ஜோடி' என்று குறிப்பிட்டு கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

also read : வாவ்!! நீருக்கு அடியில் பிரபல சமையற் கலைஞர் செய்த காரியம்... வைரல் வீடியோ!



இது பகிரப்பட்டதில் இருந்து, சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். "மிக சிறப்பு" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். "அருமையான சாதனை" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். "அந்த 2 பேரும் சிறந்த ஜோடி" என்று இன்னொருவர் வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி