Home /News /trend /

19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 3 கோடி மதிப்புள்ள மதுவை திருடிய தம்பதி!

19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 3 கோடி மதிப்புள்ள மதுவை திருடிய தம்பதி!

19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 3 கோடி மதிப்புள்ள மதுவை திருடிய தம்பதி

19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 3 கோடி மதிப்புள்ள மதுவை திருடிய தம்பதி

ஸ்பெயினில் ஒரு பிரபலமான ஹோட்டலான ‘அட்ரியோ’ (Atrio) இல், ஒரு தம்பதி மிகவும் விலையுயர்ந்த மது பாட்டில்களை திருடியுள்ளார்கள்.

ஸ்பெயினில் உள்ள ஹோட்டலில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 19ம் நூற்றாண்டு மதுவை தம்பதிகள் திருடியுள்ளனர்.

மது குடிப்பது என்பது இருபாலருக்கும் பொதுவானது ஆகும். வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துவார்கள். ஒவ்வொரு மதுவகையும் ஒவ்வொரு விலையை கொண்டிருக்கும்.சில மது வகைகள் விலை உயர்ந்தவையாக இருக்கின்றது. அதிலும் பழமையான மது வகை என்றால் சொல்லவே தேவையில்லை.விலை மிகவும் உயர்ந்ததாக இருக்கும்.

லட்சமாகவோ அல்லது கோடியாகவோ கூட இருக்கலாம். பணக்காரார்கள் பலரும் விலை உயர்ந்த மதுவினையே குடிக்க விரும்புவார்கள். சிலர் அத்தகைய மதுக்களை சேகரிக்க விரும்புகிறார்கள். பழைய காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் மட்டும்தான் சேமிக்க வேண்டும் என்று இருக்கிறதா என்ன? எந்தவொரு பொருளையும் சேமிக்கலாம். மதுவை வாங்கக்கூடியவர்கள் அதை வாங்குகிறார்கள். அதே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் சிலர் அதனை திருடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ஹோட்டலில் மதுவை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் ஒரு பிரபலமான ஹோட்டலான ‘அட்ரியோ’ (Atrio) இல், ஒரு தம்பதி மிகவும் விலையுயர்ந்த மது பாட்டில்களை திருடியுள்ளார்கள். ஹோட்டல் உணவு மற்றும் சேவைகளுக்காக அறியப்பட்டதைப் போலவே, விலையுயர்ந்த ஒயின்களின் சேகரிப்புக்கும் இது அட்ரியோ ஹோட்டல் மிகவும் பிரபலமானது ஆகும். சமீபத்தில் இந்த ஹோட்டலில் சுமார் 45 மது பாட்டில்கள் திருடப்பட்டன.

இந்த பாட்டில்களில் சில 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். திருடப்பட்ட அந்த பாட்டில்களில் ஒரு பாட்டில் விலை அதிகம் என்பதால், ஹோட்டல் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்துள்ளது. 1806ன் Chateau d'Yquem என்று பெயரிடப்பட்ட ஒயின் விலை 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். இந்த ஒயின் பிரான்சின் சிறப்பு ஒயின் தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இதுபற்றி பேசிய ஹோட்டலின் உரிமையாளர் ஜோஸ் போலோ, ‘கொள்ளை சம்பவத்திற்கு ஆங்கிலம் பேசும் தம்பதியரே காரணம். அவர்கள் எல்லாரையும் போல சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அந்த தம்பதியினர் பசி எடுக்கிறது, உடனடியாக உணவு வேண்டும் என்று கேட்டனர். வரவேற்பறையில் இருந்த நபர் சமையலறைக்கு சென்று உணவு தயாரிக்க கிளம்பிவிட்டார்.

Also read... ’மாம்பழ ஜூஸைக் கொடு, கண்ணாடியை எடுத்துக்கொள்’ குரங்கு செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ!

இன்னும் சில பணியாளர்கள் வந்து என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு உள்ளே சென்று விட்டனர். அப்போது பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை. அந்த நேரத்தில் சந்தேகப்படும் தம்பதிகள் மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பாதாள அறைக்குள் மெதுவாக நுழைந்து, அங்கிருந்த பாட்டில்களை திருடிச் சென்றிருக்கின்றனர்.

ஹோட்டல் பணிபுரியும் மற்ற ஊழியர்களும் விருந்தினர்களை பார்த்துக் கொண்டிருந்ததால், பாதுகாப்பு கேமராக்களை யாரும் கவனிக்கவில்லை. அங்கு வைத்து இருந்த மதுக்களை காணவில்லை என்று தெரிந்த பிறகே இப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது எங்களுக்கு தெரியவந்தது’ என்று கூறினார். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Spain

அடுத்த செய்தி