உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஒர் இரவு நேரத்தில் நகரமே பைக் மற்றும் கார்கள் சற்று நெரிசலுடன் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடி சென்றனர். காதலர் பைக்கை ஓட்ட அவரை பார்த்தபடி எதிரே அமர்ந்துகொண்ட காதலி, அவரை இறுக்கி அணைத்தபடியே வருகிறார். அருகில் யாரும் இருக்கிறார்களா என்பதைக் கூட மறந்து அந்த காதல் ஜோடி பைக்கில் ஹாயாக தங்களது காதலை வளர்த்து வந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்த ஒருநபர் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலானது. மேலும், லட்சக்கணக்கான வியூஸ்களையும் குவித்தது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நடுரோட்டில் இப்படி செய்யலாமா எனக் குறிப்பிட்டு பலரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க லக்னோ காவல் துறைக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்தனர்.
விஷயம் தீவிரமாகவே விசாரணையைத் தொடக்கியுள்ளது காவல்துறை. லக்னோ உதவி கமிஷனர் அபர்ணா, “இது லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகியுள்ளது. இரண்டு தனிப்படையினர் அமைக்கப்பட்டு காதலர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்” என்றார்.
#लखनऊ के हज़रतगंज में एक बेशर्म रंग ये भी देखने को मिला #ViralVideos @dcpcentrallko @lkopolice @dcptrafficlko @Uppolice @NeeleshChauha pic.twitter.com/2YVlTG2nGU
— Journalist Shariq (@JournalistShar7) January 17, 2023
காதல் ஜோடி சென்ற பகுதிக்கு அருகில் இருக்கும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வரும் போலீசார், அதனடிப்படையில் ஜோடியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழும், பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளுதல் என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Romance, Trending Video, Uttar pradesh