ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'தப்பிச்சிட்டோம்'.. தீப்பிடித்த விமானம்.. அசராமல் செல்ஃபி எடுத்த ஜோடி..! கடுப்பான நெட்டிசன்ஸ்!

'தப்பிச்சிட்டோம்'.. தீப்பிடித்த விமானம்.. அசராமல் செல்ஃபி எடுத்த ஜோடி..! கடுப்பான நெட்டிசன்ஸ்!

பெரு தம்பதி

பெரு தம்பதி

ஒரு தம்பதியினர், எந்த காயமும் இல்லாமல் விமானத்தில் இருந்து தப்பித்து, சேதமடைந்த விமானத்துடன் செல்ஃபி எடுத்து அதை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  கடந்த வாரம் பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட LATAM ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையில் செல்லும்போது அங்கிருந்த தீயணைப்பு வாகனத்தை மோதியதில் தீப்பிடித்தது.

  அதிர்ஷ்டவசமாக, விமானக் குழுவினருடன் விமானத்தில் இருந்த 120 பயணிகளும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். இருப்பினும், இந்த விபத்தில் ஓடுபாதையில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

  இந்த விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தம்பதியினர், எந்த காயமும் இல்லாமல் விமானத்தில் இருந்து தப்பித்து, சேதமடைந்த விமானத்துடன் செல்ஃபி எடுத்து அதை தங்களது சமூக வலைத்தளத்தில் "வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் போது." என்ற தலைப்பிட்டு தங்கள் உயிர்வாழ்வைக் கொண்டாடினர்.

  இதையும் படிங்க : மாயன் பிரமிடில் ஏறி குத்தாட்டம் போட்ட பெண்... ஆத்திரமடைந்து அடி வெளுத்த ஊர்மக்கள்!

  புகைப்படத்தில் இருப்பவர் என நம்பப்படும் என்ரிக் வர்சி-ரோஸ்பிக்லியோசி, விமானத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது மனைவியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். புகைப்படத்தில், அவர்கள் மேல் தீயை அடக்கும் வெள்ளை சுண்ணாம்பு இரசாயனம் இருந்தது. அதோடு தீப்பிடித்த விமானத்துடன் செலஃபீ எடுத்துள்ளது தெரிகிறது.

  அவர்களுக்குப் பின்னால், LATAM விமானம் ஓரளவு எரிந்து, தரையின் மீது சாய்ந்திருப்பதைக் காணலாம். உயிர் தப்பிய மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு எடுத்த இந்த அப்படம் இப்போது நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

  அவர்கள் உயிர்பிழைத்ததில் மகிழ்ச்சி என்று சிலர் நிம்மதி அடைந்தாலும் அதே நேரத்தில் அங்குள்ள மற்றவர்களின் நிலை குருத்து பார்க்காமல் செல்ஃபீ எடுக்கும் இந்த நடவடிக்கை வெறுக்கத்தக்கது என்று விமர்சனங்களும் எழுந்து வருகிறது. உயிருக்கு போராடும் நிலையிலும் , உயிர் தப்பிய நிலையம் கூட இந்த செல்ஃபீ எடுக்கும் கலாச்சாரம் சரியா என்று கடிந்து தள்ளுகின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Peru, Plane crash, Selfie