Viral Video: பைக் ஓட்டிக் கொண்டே காதல் ஜோடி அநாகரிகம்... உள்ளூர்வாசிகள் விளாசல்...

வைரலாகும் வீடியோ

காதல் ஜோடிகள் பைக்கில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு இப்படி அநாகரிக செயலில் ஈடுபட்டதை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

  • Share this:
    சாலையில் பைக் ஓட்டிக் கொண்டே காதல் ஜோடி அநாகரிக செயலில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.

    பீகார் மாநிலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் பைக் ஓட்டிக் கொண்டே காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக் முன் பகுதியில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து கொண்டு அவரது ஆண் நண்பருக்கு முத்தமிட்டு கொண்டே வந்துள்ளார்.

    Also Read : மொட்டை மாடிக்கு போகலாம்... முதலிரவில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

    காதல் ஜோடிகள் பைக்கில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு இப்படி அநாகரிக செயலில் ஈடுபட்டதை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். பைக்கில் இருந்த ஜோடிகளை மற்றொரு பைக்கில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளார்.



    அதன்பின் வீடியோ எடுப்பதை பார்த்த ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய உள்ளூர்வாசிகள் இதுப்போன்று நடந்து கொள்ள அருவருப்பாக இல்லையா என்று கேள்விகளால் விளாசி உள்ளனர்.

    மேலும் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று எல்லாம் விசாரித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க முயன்றுள்ளனர். இதனால் பதறிப்போன காதல்ஜோடி மீண்டும் இந்த பக்கம் வரமாட்டோம், இதுப்போன்று நடந்து கொள்ளவும் மாட்டோம் என்று கெஞ்சி அங்கிருந்து சென்றுள்ளனர்.



    இதேப் போன்ற சம்பவம் கோவாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோடி சாலை விதிகளை மீறி பைக் ஓட்டி உள்ளனர். பெட்ரோல் டேங்க் மீது பெண் ஒருவர் படுத்து கொண்டே பயணித்தார். இதைப் பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து ரூ.1000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: