காதல் என்ற பெயரில் இளம்ஜோடி பொது இடங்களில் எல்லை மீறி நடந்து கொள்வது தற்போது அதிகமாகி வருகிறது. ஃபேஸ்புக் காதல், இன்ஷ்டா காதல் என சிறுவயதிலேயே ஜோடி ஜோடியாக பலர் சுற்றி திரிந்து வருகின்றனர். பெற்றோர்கள் கவனமாக தங்களது குழந்தைகளை பார்த்து கொண்டாலும் இவர்களது சேட்டை குறைந்தபாடில்லை. அதுவும் பொது இடங்களில் எல்லை மீறி காதல் ஜோடி நடந்து கொள்ளும் அநாகரீக வீடியோக்கள் பல சோசியல் மீடியாவில் வெளியாகி பார்ப்பவர்கள் முகத்தை சுழிக்க வைக்கும்.
அப்படி ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும் சாதாரண முறையில் இல்லை. இளைஞர் தனது பெண் தோழியை பெட்ரோல் டேங்க் மீது வைத்து கொண்டு ஜாலியாக பயணித்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் கவனத்திற்கு சென்றுள்ளது. பைக்கில் இருந்த வண்டி எண்ணை வைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த பெண்ணை கட்டிப்பிடித்தவாறு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, அலட்சியமாக வாகனம் ஓடிய அஜய்குமார் மற்றும் ஷைலஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து ஆலோசனை வழங்கினர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.