Home /News /trend /

2 அடுக்கு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்!

2 அடுக்கு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்!

சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்

சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்

ஒரு தம்பதி தங்கள் ஆசை நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் ஒரு தம்பதி அதற்காக 2 மாடி வீட்டை கட்டி பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

மனிதர்களுக்கும் - விலங்குகளுக்கு இடையிலான பாசம் மற்றும் நட்பு எப்போதுமே மிக ஆழமாக இருக்கிறது. குறிப்பாக நாய்கள் நம்முடைய உற்ற தோழனாக கருதப்படுவதால் நிறைய மக்கள் நாய் வளர்ப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். மேலும் வீட்டில் ஒரு பிள்ளையை போன்றே நாய்களை செல்லமாக வளர்க்கும் மக்கள் அதற்கு நிறைய செலவு செய்து பராமரிப்பதோடு, அவற்றுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் நாய், ஆபத்து சூழலில் தனது உரிமையாளருக்காக உயிரையும் கொடுக்க தயங்குவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். எனவே தங்கள் வீட்டு பிள்ளைகளை போலவே நாய்களை வளர்க்கும் சிலர் அதற்காக டிசைனர் ஆடைகளை உருவாக்குகிறார்கள், சிலர் அதற்கு பெரிய பர்த்டே பார்ட்டி நடத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில், தங்கள் செல்லப்பிராணிகளுக்காக நிறைய செலவழித்து, அவற்றுக்கு ஆடம்பர வாழ்க்கையை அளிக்கும் இது போன்ற பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம் அல்லது சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்போம்.

இந்நிலையில் ஒரு தம்பதி தங்கள் ஆசை நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் ஒரு தம்பதி அதற்காக 2 மாடி வீட்டை கட்டி பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். தங்கள் நாய்க்காக கட்டியுள்ள வீடு குறித்து அந்த தம்பதியினர் TikTok-ல் ஷேர் செய்து உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களுடைய செல்ல கோல்டன் ரெட்ரீவருக்காக கட்டியுள்ள இரட்டை மாடி வீட்டிற்குள், அதற்கான தனிப்பட்ட இடம் மற்றும் ஒரு டிவி செட் உள்ளது.

ALSO READ |  திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் அதிரடி கேள்வி – மணமகனின் வேடிக்கையான பதில்

Chipheregirl என்ற டிக் டாக் அக்கவுண்ட்டில் இது தொடர்பான வீடியோவை குறிப்பிட்ட நயன் ஓனர் ஷேர் செய்து இருக்கிறார். வீடியோவில் நாயின் ஓனர்களில் ஒருவரான பெண் பேசியுள்ளார். "எனது கணவர் வீட்டில் வளரும் எங்கள் நாய்க்கு டாக் ஹவுஸ்(dog hous) ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த வீட்டில் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. தனி டிவி, தனி படுக்கை, ஃபிரிட்ஜ், தனி சோஃபா மற்றும் பல இதில் அடங்கும்.



அதுமட்டுமின்றி ஃபிரிட்ஜில் அதற்கு தேவையான உணவுகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. இங்கே எங்களது ஆசை நாய் நன்கு சொகுசாக வாழ்கிறது " என தெரிவித்துள்ளார். போதுமான சூரிய ஒளி மற்றும் காற்று கிடைக்கும் வகையில் வீடு மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவில் தெரிகிறது. தவிர மேலே உள்ள அறையில் இருந்து நாய் கீழே வருவதற்காக வீட்டில் ஸ்லைடும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டாக் ஹவுஸ் வீடியோ ஏற்கனவே மில்லியன் கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பல யூஸர்கள் குறிப்பிட்ட நாய்க்கு கிடைத்துள்ள வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படுவதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dog, Viral Video

அடுத்த செய்தி