ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதலில் விழுந்த தம்பதிகள்: மீண்டும் திருமணம்!

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதலில் விழுந்த தம்பதிகள்: மீண்டும் திருமணம்!

சிறிய சண்டை நாட்கள் செல்ல செல்ல மிகப்பெரிய அளவில் வளர்ந்து 2012 ஆம் ஆண்டு டாம் அதிகாரப்பூர்வமாக டேனியலுக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காதல் எப்போதும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணத்தில் பின் மோதல் ஏற்பட்டு, விவாகரத்து பெற்று மீண்டும் காதல் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரு ஈமெயில் தான் காரணம் என்று கூறினால் நம்ப முடியுமா?.

  டேனியல் கர்டிஸ் மற்றும் டாம் கர்டீஸ் ஆகிய இருவரும் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டேட்டிங் வலைதளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். நாள்பட்ட சந்திப்புகளுக்கும், இரவு உணவுகளுக்கும் பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டு 2003 ஆம் ஆண்டு பின் தன்னுடைய காதலை வெளிப்படுத்த இரண்டு வருடம் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

  இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் டேனியலுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். டாம் அந்த குழந்தைகளை தன் குழந்தைகள் போல் வளர்த்து வந்தார். மேலும் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இன்னும் மூன்று குழந்தைகள் பிறந்து, தொழிலும் நன்றாக அமைய வாழ்க்கை நல்லவிதமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையினால், இவர்களின் வாழ்க்கை தடம் மாறியது. பொருளாதார முன்னேற்றதற்காக டாம் வேறு இடத்திற்கு சென்று வேலை பார்க்கும் படி நேர்ந்தது.

  Also Read : மாமியாருடன் இணைந்து விவசாயம் பார்க்கும் வெளிநாட்டு மருமகள் - குவியும் பாராட்டு

  நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அவர்களுக்குள்ளே உள்ள தொடர்பு சிறிது சிறிதாக குறைந்து வந்தது. சிறிய சண்டை நாட்கள் செல்ல செல்ல மிகப்பெரிய அளவில் வளர்ந்து 2012 ஆம் ஆண்டு டாம் அதிகாரப்பூர்வமாக டேனியலுக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கிடைப்பட்ட காலங்களில் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. குழந்தைகள் மட்டும் தாயிடமும் தந்தையிடமும் மாறி மாறி வளர்ந்து வந்தனர். மேலும் இருவரும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பொருட்டு பலவித நபர்களுடன் டேட்டிங் செய்து எதுவும் சரியாக அமையவில்லை.

  2017 ஆம் ஆண்டு டேனியல் மருத்துவரிடம் கவுன்சிலிங் சென்றபோது, டாம் டேனியலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் செய்த தவறுகளை மன்னித்து குழந்தைகளின் நன்றாக பார்த்துக் கொள்வதற்காக அவரை பாராட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து டேனியலும் டாமிற்கு ஒரு இமெயிலை அனுப்பியுள்ளார். இந்தப் பாராட்டு கடிதத்தைப் பார்த்த டாமிருக்கும் மனம் மகிழ்ந்து போனது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இவர்களுக்குள் உறவு பலப்பட, அடுத்த ஆறு மாதத்தின் பின் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசிக் கொண்டனர். கிட்டத்தட்ட புதிதாக சந்திக்கும் காதலர்கள் போல இருந்த இவர்கள், அனைத்து பிரச்சனைகளையும் மறந்து மீண்டும் திருமணம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

  தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் நன்மைக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தங்களுக்குள் உள்ள காதல் இன்னும் அதிகரித்துள்ளதாகவும் அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trending, Viral