லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தவறுதலாக ரியோனேர் விமானத்தில் ஏறி செல்ல வேண்டிய இடத்திற்குப் பதிலாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று விட்டனர். பிரான்ஸ் நாட்டின் மர்சில்லே நகரில் இருந்து, லண்டன் அருகே உள்ள ஸ்டான்செட் நகருக்கு திரும்ப வேண்டிய இவர்கள் 800 மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தில் தரையிறங்கியுள்ளனர்.
இந்த தம்பதியரின் பெயர் எலீஸே மாலியா மற்றும் ஜெஸ்ஸி ஜெஸெக்குவல் ஆகும். இதுகுறித்து லேட்பைப்பிள் என்ற ஊடகத்திடம் எலீஸே கூறுகையில், “விமானத்தில் ஏறி எங்கள் பயணம் ஒரு மணி நேரம் கடந்த நிலையில், விமானப் பணியாளரிடம் இருந்து மேட்ரிட் (ஸ்பெயின் தலைநகரம்) என்ற வார்த்தை கேட்டதாக ஜெஸ்ஸி கூறினார். ஆனால், அவர் கனவு கண்டிருக்கலாம் என நாங்கள் நினைத்தோம். பிறகு தான் விமானப் பணியாளர்கள் பேசுவது ஸ்பானிஷ் மொழி என்பது தெரியவந்தது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து விமானப் பணியாளர்களிடம் நாங்கள் கேட்டபோது, இந்த விமானம் மேட்ரிட் நகருக்கு சென்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார் ஜெஸ்ஸி. அருகாமையில் உள்ள மர்சில்லே போர்ட் டவுன் என்ற இடத்தில் நடைபெறும் ஃபுட்பால் மேட்ச் ஒன்றை பார்வையிடுவதற்காக இவர்கள் சென்றிருந்தனர். ஆனால், அங்கிருந்து வீடு திரும்புகையில் அந்தப் பயணம் திசை மாறிப் போய் நீண்ட தொலைவுக்குச் செல்லும் என்று அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
also read : சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம் - ஆச்சரியமூட்டும் விசித்திர கதை.!
விமானம் புறப்படுவதற்கு முன்பாக, மூன்று முறை ஸ்கேன் செய்யப்பட்ட தங்கள் போர்டிங் பாஸ் தவறுதலாக மாறியிருக்கலாம் என்று இந்தத் தம்பதியர் தெரிவித்தனர். போர்டிங் பாஸ் செக் செய்தபோது, இவர்கள் ஸ்டான்செட் நகருக்கு செல்ல வேண்டும் என்பதையே குறிப்பிட்டனர். ஆனால், செக்யூரிட்டி கேட் அருகே செல்லும் போது வழி தவறிய இவர்கள், சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக நினைத்து விட்டனர்.
மேட்ரிட் என்ற நகரின் பெயரைக் கேட்டதும், நம்முடைய விடுமுறை ஸ்பெயினில் தான் போல என்று கணவரிடம், மனைவி ஜோக் அடித்தார். இவர்கள் வழி மாறி வந்திருப்பது விமானப் பணியாளர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது. பிறகு ஒருவழியாக, மீண்டும் செல்ல வேண்டிய இடத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
also read : தனக்கான நிரந்தர வீட்டை அடைய 5 நாட்கள் விமான பயணம் செய்த இந்திய நாய்!
இதுகுறித்து ரியானேர் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ஜெஸ்ஸி மற்றும் அவரது மனைவி இருவரும் சரியான செக்யூரிட்டி கேட் வழியாகத் தான் சென்றனர். அதற்குப் பிறகு விமானம் ஏறுகையில் அவர்கள் வழி தவறி சென்றிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மேட்ரிட் செல்லும் விமானத்தில் ஏறிவிட்டனர். அதே சமயம், மேட்ரிட் செல்லும் விமானத்தில் அனைத்து சீட்களும் நிரம்பவில்லை என்ற சூழலில், தாங்கள் புக் செய்திருந்த அதே நம்பர் சீட்களில் இவர்கள் அமர்ந்து விட்டனர். இதனால், அவர்களுடைய தவறு தெரியாமல் போய்விட்டது’’ என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.