சீனாவில் துரத்தியடிக்கும் கொரானோ வைரஸ் மத்தியிலும் நெகிழ வைக்கும் காதல் காட்சி..!

சீனாவில் துரத்தியடிக்கும் கொரானோ வைரஸ் மத்தியிலும்  நெகிழ வைக்கும் காதல் காட்சி..!
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் துரத்தியடிக்கும் சூழ்நிலையில், நிகழ்ந்த நெகிழ வைக்கும் காதல் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பால் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 24,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஜால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள HANGZHOU நகரில் கொரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கி வருகிறது.


இங்கு பணியாற்றும்  செவிலியர் ஒருவரை காண அவரது காதலர் வந்தார். கொரோனா அச்சம் காரணமாக இருவரும் கண்ணாடி தடுப்புகளின் வழியே சந்திக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எனினும் இணையை கண்ட மகிழ்வில் நெகிழ்ந்த காதலர்கள் கண்ணாடி தடுப்புகளின் வழியே முத்தமிட்ட காட்சி வெளியாகியுள்ளது.இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. சீனாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இடைவிடாது சிகிச்சை பணியை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையில் தங்கி தன்னலமற்ற சேவையை தொடர்ந்து வருகின்றனர்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்