ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாலையில் அட்டூழியம் செய்த இளைஞர்கள் : குழந்தைகள் விளையாடும் பீப்பீயை வைத்து நூதன தண்டனை வழங்கிய போலீசார்..!

சாலையில் அட்டூழியம் செய்த இளைஞர்கள் : குழந்தைகள் விளையாடும் பீப்பீயை வைத்து நூதன தண்டனை வழங்கிய போலீசார்..!

இளைஞர்களை தண்டித்த காவல்துறை

இளைஞர்களை தண்டித்த காவல்துறை

சாலையில் வழிப்போக்கர்களின் காதில் பீபீயை ஊதி தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு காவலர்கள் விநோதமான தண்டனை அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  மத்தியப் பிரதேசத்தின் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் காதில் குழந்தைகள் விளையாடும் பீப்பீயை வைத்து தொந்தரவு செய்த இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்ததுடன், அதே பீப்பீ வைத்து தண்டனையும் போலீசார்  வழங்கினர்.

  மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டு இரண்டு இளைஞர்கள் வழிப்போக்கர்களின் காதில் குழந்தைகள் விளையாடும் பீப்பீயை வைத்து ஊதி வெறுப்பேற்றியுள்ளனர்.

  இதை கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அந்த தொந்தரவில் எரிச்சலை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர்கள் இருவரையும் ஒருவரின் காதில் ஒருவரை பீப்பீயை ஊத வைத்துள்ளனர். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  மேலும் அதை எப்படி வைத்து ஊத வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை வழிநடத்தியும் உள்ளனர்.

  பின்னர், தண்டனையாக இருவரையும் சாலையில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பொம்மை பீப்பீயும் கைப்பற்றப்பட்டுள்ளது.

  Also Read : 1,158 கிலோ எடையுள்ள பூசணிக்காயை வளர்த்து சாதனை படைத்த 63 வயதான முதியவர்!

  இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லிப் புரியும் வகையில் தண்டனை வழங்கிய காவல்துறைக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Madhya pradesh, Viral Video