Home /News /trend /

சினிமா பட பாணியில் 8 மாசமாக இயங்கிய போலி காவல்நிலையம்.. மர்ம நபர்கள் சிக்கியது எப்படி.?

சினிமா பட பாணியில் 8 மாசமாக இயங்கிய போலி காவல்நிலையம்.. மர்ம நபர்கள் சிக்கியது எப்படி.?

Bihar

Bihar

Fake Police Station | பீகாரில் கடந்த 8 மாதங்களாக போலி காவல்நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. உண்மையான காவல்நிலையம் என நம்பி புகாரளிக்க வந்தோரிடம் பணம் வசூலிக்கும் மர்ம கும்பல் தற்போது போலீஸில் சிக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
இன்றைக்கு உள்ள சூழலில் மக்கள் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருள்கள் போலியாகத் தயாரிக்கப்படுகிறது. இதனை வாங்கி, மக்கள் பலர் ஏமாந்து வரும் சூழலில் காவல்நிலையத்தில் தான் புகார் அளித்து நீதியைப் பெறுகின்றனர். ஆனால் காவல்நிலையமே போலியாக இருந்தால் என்ன செய்வர் மக்கள்?. இப்படியொரு சம்பவம் தான் பீகாரில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பட பாணியில் பீகாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காவல்நிலையம் போன்று பொய்யான செட்அப்களை செய்துள்ளனர். இங்கு பணியாற்ற 2 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர்.

உண்மையான போலீசார் அணியும் உடைப்போன்றும், கையில் போலியான துப்பாக்கிகள், காவல் ஆய்வாளர், கான்ஸ்டபிள் என அனைத்தையும் பக்காவாக ரெடி செய்துள்ளனர். இந்த போலி காவல்நிலையம் காவல்நிலைய உயர் அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்துள்ளது. இந்த சூழலை நம்பி ஏமாந்து பல மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் புகார் அளித்துள்ளனர்.

இப்படி புகாரளிக்க வரும் நபர்களிம் பண வசூல் செய்வதை மட்டுமே இவர்களின் வருமானமாக இருந்துள்ளது. ஆனால் புகார்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான், போலி காவல்நிலையத்தின் மீது அதிகளவில் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான், ஒரு பெண் உள்பட இரண்டு போலீஸ் அதிகாரிகள் காவல்துறை சீருடையில் போலி துப்பாக்கிகளைச் சுமந்து செல்வதை உண்மையான காவலர் ஒருவர் பார்த்திருக்கிறார். இவர்களை விசாரிக்கையில் போலி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.போலீசாரால் கைது செய்யப்பட் அனிதா தேவி முர்மு மற்றும் ஆகாஷ் குமார் மஞ்சி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், புல்லிடுமாரைச் சேர்ந்த போலா யாதவ் தான் கும்பலின் தலைவர் என்று தெரியவந்துள்ளது. காவல்துறையில் வேலை வாங்கித் தருவதற்காக போலாவுக்கு ஆயிரக்கணக்காக ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் கூறினர். மேலும் தனியார் விருந்தினர் மாளிகையில் அலுவலகம் போன்ற சூழலைக் கொடுத்ததால் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டதாக நினைத்து உண்மையான போலீஸ் ஆகிவிட்டோம் என் நினைப்பில் இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் ஏமாற்றப்பட்டது போலீசார் விசாரணையின் மூலம் தான் தெரியவந்துள்ளது.

Also Read : ”வாழ்க்கைக்கு திருமணம் அருமருந்தாம்”- மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.. வைரல் சம்பவம்

இந்த போலி காவல்நிலையம் செயல்படுவதற்கு மூளையாக இருந்த போலா யாதவ் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் போலி காவல்நிலையத்தில் இருந்த உரிமம் இல்லாத, நாட்டுத் துப்பாக்கி, செல்போன், ஆவணங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read : திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தை.. ராஜஸ்தான் தம்பதியின் மன உறுதிக்கு கிடைத்த பரிசு.! 

இச்சம்பவம் பீகாரில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அஸ்லாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த போலி போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Bihar, Police station, Trending

அடுத்த செய்தி