போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது பைக்கை ஏற்றி கொடூரமாக தாக்கிய போலீசார்! பதறவைக்கும் காட்சி

பொருளாதாரத்தில் சமத்துவம் மற்றும் நிலையான தன்மையை அரசு முன்எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது பைக்கை ஏற்றி கொடூரமாக தாக்கிய போலீசார்! பதறவைக்கும் காட்சி
  • Share this:
சிலியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது போலீசார் பைக்கை ஏற்றி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிலி நாட்டில் கடந்த 6 வாரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதாரத்தில் சமத்துவம் மற்றும் நிலையான தன்மையை அரசு முன்எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை பைக்கில் வரும் 3 போலீசார் அடித்து விரட்டுகின்றனர். போலீசாரின் தாக்குதலில் சிக்கியவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவரை ஒரு போலீசார் பைக்கை கொண்டு வேகமாக மோதுகிறார், மற்றொரு போலீசார் அவர் மீது பைக்கை ஏற்றுகிறார்.
இதை பார்த்த பெண்கள் ஒடி வந்து போலீசாரின் தாக்குதலில் இருந்து அவரை மீட்டு செல்கின்றனர். இந்த தாக்குதலை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிலி போலீசாருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சிலி நாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 13,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்