தும்மியதால் போலீசையே தாக்கிய இளைஞர்கள்.. எஃப்.ஐ.ஆர் பதிந்து உள்ளே தள்ளிய காவல்துறை!

மாதிரி படம்

காவல்துறை அதிகாரியின் விளக்கத்தை கேட்காமல் அவரை தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அகமதாபாத்தில் உள்ள கிருஷ்ணநகர் காவல்துறையைச் சேர்ந்த லோக் ரக்ஷக் தால் (LRD) போலீஸ் அதிகாரி கடந்த சனிக்கிழமை(பிப்.6) அன்று நரோடாவில் உள்ள மம்லதார் அலுவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தும்மியதற்காக ஐந்து நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரியை தாக்கிய 5 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணநகர் காவல்துறையின் கணக்குப் பிரிவில் பணியாற்றி வருபவர் தான் எல்.ஆர்.டி அதிகாரி யுவராஜ்சின் ஜாலா.  வயது 26 இருக்கும்.

இது குறித்து எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளதாவது, "கிருஷ்ணநகர் பொலிஸ் கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட சில நிலங்கள் குறித்து விசாரிக்க தான் நரோடா காமில் உள்ள மம்லதார் அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்றதாக ஜாலா குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது வேலையை முடித்துவிட்டு பிற்பகல் 3 மணியளவில் படிக்கட்டு வழியாக கீழே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென்று தும்மல் வந்துள்ளது. அந்த நேரத்தில், படிக்கட்டுகளில் நின்ற இரண்டு நபர்கள் ஜாலாவிடம் சில நல்ல வேலைகளுக்காக இங்கு வந்தபோது எவ்வாறு தும்மத் துணிந்தீர்கள்" என்று அவரிடம் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... ஆந்திராவில் கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த 17 வயது மகனை கொலை செய்த தாய்!

இதையடுத்து தான் ஒரு போலீஸ்காரர் என்றும் அலுவலக வேலைக்காக அங்கு வந்ததாகவும் ஜாலா அவர்களிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், மேலும் மூன்று ஆண்கள் அங்கு விரைந்து வந்து ஜாலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை அதிகாரியின் விளக்கத்தை கேட்காமல் அவரை தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. போலீசார் ஜாலா உதவிக்காக அலறியபிறகு, மம்லதார் அலுவலகத்தில் இருந்த மற்றவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர். 

ஜாலா பின்னர் கிருஷ்ணநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமர்சிங் சவுகானுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நரோடாவில் வசிக்கும் ஜகதீஷ் பார்வத், பாரத் பார்வாட் மற்றும் குபெர்நகரைச் சேர்ந்த விபுல் பர்வாட் மற்றும் சர்தார்நகரைச் சேர்ந்த சஞ்சய் பர்வாட் மற்றும் ரவி பர்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நரோடா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜாலா தற்போது அசர்வாவில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: