Home /News /trend /

காவல் நிலையத்திலேயே அமர்ந்து மது அருந்திய காவலர்கள்..வைரலாகும் வீடியோ

காவல் நிலையத்திலேயே அமர்ந்து மது அருந்திய காவலர்கள்..வைரலாகும் வீடியோ

வைரலாகும் காவலரின் செயல்.!

வைரலாகும் காவலரின் செயல்.!

Viral Video : காவலர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India
    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

    கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில் உள்ள கவுனிபள்ளி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.ஸ்டேஷன் போலீஸ் கான்ஸ்டபிள்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பணியின் போது காவல் நிலையத்தையே மதுக்கடையாக மாற்றியுள்ள காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்திய மூன்று பேரை விசாரித்து வருகின்றனர்.

    செய்தியாளர் : ஓசூர் செல்வா
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி