Home /News /trend /

காஃபி கடையின் பெயர் ‘காண்டம் கஃபே’ ..கடையில் திரும்பும் திசையெங்கும் காண்டம்! ட்ரெண்டிங் வீடியோ

காஃபி கடையின் பெயர் ‘காண்டம் கஃபே’ ..கடையில் திரும்பும் திசையெங்கும் காண்டம்! ட்ரெண்டிங் வீடியோ

காஃபி கடையின் பெயர் ‘காண்டம் கஃபே’

காஃபி கடையின் பெயர் ‘காண்டம் கஃபே’

Condom Cafe In Thailand | தாய்லாந்தில் காபி ஷாப்புக்கு காண்டம் கஃபே என்று பெயர்வைத்து கடை முழுவதையும் காண்டத்தால் நிறைத்துள்ளார் கடை உரிமையாளர்.

  தாய்லாந்து என்ற பெயரை கேட்டாலே நம் அனைவருக்கும் சட்டென்று மனதில் நினைவுக்கு வருவது ‘உல்லாச சுற்றுலா’ என்பது தான். இந்த நாட்டின் பொருளாதார பலமே சுற்றுலாவை நம்பித் தான் இருக்கிறது. நாடெங்கிலும் மது விற்பனை செய்யும் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவை நிறைந்து இருக்கின்றன.

  நம்மில் ஒருசிலர் தாய்லாந்து சென்றிருக்கலாம். ஆனால், பெரும்பாலானோருக்கு அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட, தாய்லாந்து எப்படி இருக்கும் என்பதை பல யூ-டியூப் வீடியோக்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு வீடியோக்கள் மூலமாக அறிந்து வைத்திருப்போம். தாய்லாந்து நாட்டின் இயற்கை அழகுக் காட்சிகளுடன், அந்நாடு குறித்து சொல்லப்படும் கிளுகிளுப்பான தகவல்களைத் தான் அதிகம் கேட்டிருப்போம்.

  அப்படியொரு செய்திதான் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் ‘காண்டாம் கஃபே’ என்ற பெயரில் காஃபி கடை ஒன்று இயங்குகிறதாம். கடையின் பெயர் சற்று சுவாரஸ்யமானதாக இருந்தாலும், நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

  குடும்ப கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  முறையான குடும்ப கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பான செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உலகெங்கிலும் மக்கள் தொகை பெருகி வருகிறது. இத்தகைய சூழலில் ஒரு கப் காஃபி அருந்தும் சமயத்தில், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  Read More : இட்லிக்கு வந்த சோதனைய நீங்களே பாருங்க.. வைரலாகும் வீடியோ


  கடையில் திரும்பும் திசையெங்கும் காண்டம் :

  தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள மோனிஷ் தௌல்தானி என்னும் சுற்றுலா வீடியோ பதிவாளர், இந்தக் கடை குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கடையில் கண்ணில் படும் இடமெல்லாம் காண்டம் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, காண்டம்களை கொண்டு பல்வேறு அழகிய வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, காண்டம்களைக் கொண்டு ஆணின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  கடையின் சுவர்களில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பான செக்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. “காண்டோமேன்’’, “நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன்’’ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளன.   
  View this post on Instagram

   

  A post shared by Mohnish Doultani (@mohnishdoultani)


  பெயருக்கு காரணம் என்ன - உரிமையாளர் சொல்லும் விளக்கம் :

  தனது கடைக்கு ஏன் ‘காண்டம் கஃபே’ என பெயரிடப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளித்து நோட்டீஸ் போர்டு ஒன்றை கடை உரிமையாளர் வைத்திருக்கிறார். அதில், “ஏன் இந்தப் பெயர்? ஏனென்றால் மார்கெட்டில் காய்கறிகளை வாங்குவதைப் போல அனைவருக்கும் எளிமையாக காண்டம் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் அவர்.

  பாதுகாப்பான செக்ஸ் உறவு, குடும்ப கட்டுப்பாடு, பாலியல் நோய்கள் குறித்து பொதுமக்கள் இயல்பாக விவாதம் செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையின் பல இடங்களில் நகைச்சுவை துணுக்குகள், ஃபோட்டோக்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. வீடியோக்களும் பிளே செய்யப்படுகின்றன.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Condom, Thailand, Trending Video, Viral

  அடுத்த செய்தி