நம்மில் பலர், இன்றைய வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக ஷிப்ட் டைம் முடிந்த பிறகும் நாம் வேலை செய்வோம். ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சொந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரம் தேவை. நீங்கள் உங்கள் பெரும்பாலான நேரத்தை நிறுவனத்தில் செலவழித்தால், அந்த நேரத்தை உங்களால் அனுபவிக்க முடியாது.
அப்படி நீங்கள் வேலை நேரத்திற்கு மேல் பணிபுரியும் போது, "உங்கள் ஷிப்ட் முடிந்துவிட்டது, தயவுசெய்து வீட்டிற்குச் செல்லுங்கள்" என ஒரு நோட்டிபிகேஷன் வந்ததும், உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆனால் எப்படி இருக்கும்?. ஆனால், அதுக்குலாம் கொடுப்பன வேணும் என நாம் நினைப்போம். ஆனால், ஊழியர்களின் நலனை பல நிறுவனங்கள் முக்கியமாக கருதுகின்றனர். அப்படி ஒரு நிறுவனம் செய்த செய்யலை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம்.
ராஜஸ்தான் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வேலை வாழ்க்கை சமநிலைக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கியுள்ளது. ஊழியர்களின் ஷிப்ட் டைம் முடிந்ததும், "உங்கள் ஷிப்ட் முடிந்துவிட்டது, தயவுசெய்து வீட்டிற்குச் செல்லுங்கள்" என டெஸ்க்டாப் திரையில் விழிப்பூட்டல் தகவலை கொடுக்கிறது. இந்த முறையை பலரும் ஆதரித்துள்ளனர். இதை, SoftGrid Computers இல் பணிபுரியும் HR நிபுணர் தன்வி கண்டேல்வால் இதை தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், இது பிரசாரம் அல்ல… உண்மையில் இதுதான் எங்கள் அலுவலகத்தின் யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார். "எச்சரிக்கை!!! உங்கள் ஷிப்ட் நேரம் முடிந்துவிட்டது". "10 நிமிடங்களில் அலுவலக அமைப்பு நிறுத்தப்படும்". "தயவுசெய்து வீட்டிற்கு செல்லுங்கள்" (“Warning!!! Your Shift Time Is Over". "The office system will shut down in 10 minutes". "PLEASE GO HOME.”) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் இந்த நிறுவனத்தில் பணிபுரிவதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் எங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பராமரிக்க போராடுகிறோம். ஆனால், நிறுவனமே இப்படி ஒரு செய்தியை ஊழியர்களுக்கு அனுப்பினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? சிலர் கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரின் பாராட்டுக்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News, Viral News, Viral Video