தற்போது கொரானா தொற்றின் அடுத்தடுத்த அலையின் தாக்கத்தினால் பல நிறுவனங்கள் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவரும் நிலையில், அண்மையில் வெளியான இந்த வீடியோ மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். இந்த ஆஸ்திரேலிய நிறுவனம் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்தோனேசியாவில் உள்ள தீவான பாலிக்கு அழைத்துச் சென்றுள்ளது.இந்த பயணத்திற்கான மொத்த செலவையும் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது.
இந்த நிறுவனம் சிட்னியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சந்தைப்படுத்தல் நிறுவனமான "தி சூப் ஏஜென்சி" ஆகும். இந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஊழியர்களுடன் பாலி சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளது.இந்த வீடியோவில் ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது, குவாட் பைக் ஓட்டுவது, குளத்தின் அருகே யோகா செய்வது மற்றும் மது அருந்துவது என உற்சாகமான ஒரு பயணத்தின் அனுபவத்தை நாம் காணலாம்.
இந்த சூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கத்யா வகுலென்கோ இந்த பயணத்தின் அனுபவங்களை பகிரும் போது , "இந்த பயணம் அரம்பித்ததிலிருந்தே ஏஜென்சியிலுள்ள அனைவரும் ஒரு குழுவகவே செயல்பட்டனர்" என கூறினார். சொல்லப்போனால் இந்த பயணம் ஒரு புது அனுபவமாக இருந்ததாகவும்,சிறந்த குழுவை உருவாக்கும் நோக்கத்தோடே இதை தான் ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
"பணியிடங்களில் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து வேலை நேரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வேலை செய்வது மிகவும் முக்கியம்" என்று தான் நினைப்பதாக கத்யா டெய்லி மெயில் கூறினார். கோவிட்-19 காலங்களில் வேலை செய்வதற்கான புதிய வழிகள் உள்ளன என்பதை அறிந்துக்கொண்டத்தாகவும், அடிப்படையில், நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்றும் இந்த பயணம் தனக்கு கற்றுக் கொடுத்தது என்பதையும் அவர் கூறினார்.
Also Read :
பாலியல் தொழிலில் அனுபவம்... Linkedin சுயவிவரத்தில் பெண் பதிவிட்ட தகவலால் சூடான விவாதம்
இப்படியாக எங்கள் பயணத்தின் வாயிலாக நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிவு செய்தோம், என்றும் அவர் கூறினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சக ஊழியர்கள் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். அவர்களை நாங்கள் ஒரு சொகுசு வில்லாவில் தங்க வைத்தோம்.
"இதே போல் தான் மிச்செல் என்ற ஊழியர் ஒருவர் தனது 24வது பிறந்தநாளை ஒரு நாள் அதிகாலையில் எரிமலையில் ஏறி கொண்டாடினார். இப்படியான பயணங்களில் கவனச்சிதறல்கள் இருந்தபோதிலும், விடுமுறையின் நாட்கள் பயனுள்ளதாக இருந்தது. முழு ஏஜென்சியும் வேலை செய்வதற்க்கு போதுமான ஒத்துழைப்பை இந்த பயணம் அளித்ததோடு புத்துணர்ச்சியையும் அளித்தது. இது நிச்சயமாக என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது," என்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகி குமி ஹோ கூறுகிறார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே தங்கள் அடுத்த வேலை விடுமுறையை ஐரோப்பாவில் எப்படி செலவிட வேண்டும் என்பதை திட்டமிட்டு வருகிறது. லீவ் கேக்கவே யோசிக்க வைக்கும் நிறுவனங்கள் உள்ள நம் ஊரில் இது போன்ற நிறுவனங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என பெருமூச்சுடன் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.