மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்குவிக்க சாக்லேட் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்குவிக்க சாக்லேட் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

சாக்லேட்

பெல்ஜிய சாக்லேட் நிறுவனம் ஒன்று, இப்போது பெரிய சாக்லேட் சிரிஞ்ச்களை உற்பத்தி செய்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தங்கள் தயாரிப்புகளில் தொற்று முன்னெச்சரிக்கை தொடர்பான வாசகங்கள் இடம் பெறுமாறு பார்த்து கொள்கின்றன. வேறு சில நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளில் வித்தியாசம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பெல்ஜிய சாக்லேட் நிறுவனம் ஒன்று, இப்போது பெரிய சாக்லேட் சிரிஞ்ச்களை உற்பத்தி செய்கிறது.

கொரோனா துவக்கத்தில் கடந்த ஒரு வருடம் முன் இந்த நிறுவனம் அதன் ஈஸ்டர் சாக்லேட் முயல்கள் முகத்தில் வெள்ளை மாஸ்குகளை அணிந்திருப்பதை போல் வடிவமைத்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக்கவசம் அணிவதை வாடிக்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் முயல் சாக்லேட்களை குறிப்பிட்ட பெல்ஜிய சாக்லேட் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதுமே கொரோனா மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தொற்றின் வீரியத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.

ஆனாலும் கொரோனா கடந்த சில வாரங்களாக உலகின் பல பகுதிகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசிகள் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் பயமே காரணம் என கூறப்படுகிறது. எனவே பெரும்பாலான நாடுகள், தங்கள் மக்களை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் முயல் சாக்லேட்டுகளின் முகத்தில் மாஸ்க் மாட்டிவிட்ட பெல்ஜிய சாக்லேட் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் வளர்ந்து வரும் போக்கை கொண்டு முன்னேற முயற்சிக்கிறது.

Also read... உயிருக்கு போராடும் மனைவி - நகைகளை விற்று இலவச ஆக்சிஜன் வழங்கும் நபர்!

இதனை அடுத்து மகத்தான சுகாதார நன்மைகள் அடங்கிய சாக்லேட் சிரிஞ்ச்களை தயாரித்துள்ளது. பிரஸ்ஸல்ஸிலிருந்து தெற்கே 45 கி.மீ தொலைவில் உள்ள லோன்ஸீ என்ற கிராமத்தை மையமாகக் கொண்ட கோகோட்ரீ நிறுவனம், அதன் சாக்லேட் சிரிஞ்ச்களுக்கு "எல்'அட்சா ஆஸ்டெக்கா" என்று பெயரிட்டுள்ளது. இந்த சாக்லேட்டுகளில் மெக்னீசியம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இதை சாப்பிடுவதால் மக்களின் மன உறுதியை அதிகரிக்கும் என , சாக்லேட் தயாரிப்பாளர் ஜெனீவ் ட்ரெபண்ட் குறிப்பிட்டுள்ளார்.

"இது நம்பிக்கையின் சின்னம், அதனால்தான் (சாக்லேட்) தடுப்பூசியை உருவாக்க முடிவு செய்தேன்" என்று நிறுவனர் ஜெனீவ் ட்ரெபண்ட் கூறியுள்ளார். மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கவும் இந்த சாக்லேட் சிரிஞ்ச்களை வடிவமைத்துள்ளதாக நிறுவனம் கூறி உள்ளது.மேலும் இந்த சாக்லேட் சிரிஞ்சுகள் மாஸ்க் போட்டிருக்கும் முயல்களின் கைகளில் இருக்குமாறும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: