முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இன்டர்வியூ செய்த நபர் வேறு, வேலைக்கு வந்த நபர் வேறு - திட்டமிட்ட மோசடியா, நிறுவனத்தின் தவறா?

இன்டர்வியூ செய்த நபர் வேறு, வேலைக்கு வந்த நபர் வேறு - திட்டமிட்ட மோசடியா, நிறுவனத்தின் தவறா?

job interview

job interview

Job Interview | நேர்காணலுக்கு வந்த ஜானின் முடி வித்தியாசமாக இருந்தது. ஆனால் வேலைக்கு வந்த இந்த நபர் கண்ணாடி அணிந்து இருந்தார்.

  • Last Updated :

பொதுவாக கல்லூரிகளில் அல்லது உயர்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தான் வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு பதிலாக அட்டனன்ஸ் எடுக்கம்போது ப்ராக்ஸி கொடுப்பார்கள். ஒருவருக்கு பதிலாக மற்றொரு நபர் பரிட்சையில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட செய்திகள் அவ்வப்போது வெளிவரும்‌. வேலையைப் பொறுத்தவரை, அவ்வாறு மோசடி செய்ய முடியாது. பெரும்பாலானவர்கள் நேர்காணலில் எவ்வாறு தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆனால் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாக, நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வான ஒரு நபருக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது. ஆனால் வேலைக்கு சேர்ந்தவர் வேறு ஒரு நபர்! ஆள்மாறாட்டக் கதை போல விறுவிறுப்பாக இருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பது குறித்து இங்கு காண்போம்.,

ஒரு ஐடி நிறுவனத்தில் தான் தன் கணவருக்கு இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று ஒரு பெண் நடந்த விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பெண்ணுடைய கணவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அது ஒரு நடுத்தர அளவிலான தனியார் நிறுவனம். இவர் ஒரு நேர்காணல் குழுவின் ஒரு அங்கமாக பணியாற்றி வருகிறார். ஒரு குறிப்பிட்ட பணிக்காக மூன்று சுற்றுகள் நேர்காணல் நடந்தது. அதுமட்டுமின்றி இவர் தேர்வு செய்த நபர் மிகவும், திறமையாகவும் சாதுர்யமாகவும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து நேர்காணல் செய்யும் குழுவினரை அசத்தியுள்ளார்.

ஆனால் வேலைக்கு வந்த அந்த நபர் முற்றிலும் வேறு ஒரு நபராக காணப்பட்டுள்ளார். அதில் ஜான் என்பவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வேலைக்கான அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது. ஜானும் வேலையை ஏற்றுக் கொண்டு, அலுவலகத்தில் வந்து வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் வேலைக்கு வந்த ஜான், இன்டர்வியூ செய்யப்பட்ட ஜான் இல்லை என்று அப்பெண்ணுடைய கணவர் கூறியதாக அந்த பெண் கூறியிருந்தார்.

Also Read : லாட்ஜில் தோழியுடன் தங்க மனைவியின் ஆதார் அட்டையை வழங்கிய ஜகஜால கில்லாடி!

இந்த இரண்டு ஜானுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள். ஜானின் தோற்றம் எப்படி இருக்கும், அவர் எப்படி நடந்து கொண்டார், எப்படி பேசினார் என்பதை பற்றி எல்லாம் அப்பெண்ணின் கணவர் விவரித்திருக்கிறார். நேர்காணலுக்கு வந்த ஜானின் முடி வித்தியாசமாக இருந்தது. ஆனால் வேலைக்கு வந்த இந்த நபர் கண்ணாடி அணிந்து இருந்தார். வேலையில் சேர்ந்த ஜான் தன்னுடைய கராஜ் சம்பந்தப்பட்ட வேலையில் எவ்வளவு அனுபவம் இருக்கிறது, மற்றும் தனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள், என்பதைப்பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலில் ஜான் தான், சிங்கிள் என்று தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி, நேர்காணலில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்குமே வேலையில் சேர்ந்த ஜானால் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

இதற்கு, அப்பெண்மணி, உங்கள் அலுவலகத்தில் வேலைக்கான உத்தரவு அனுப்பியதில் ஏதேனும் குழப்பம் இருக்கலாம். அதனால் ஜான் என்ற தவறான நபருக்கு அப்பாயின்மென்ட் அளிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read : Viral Video : திடீரென மான் கூட்டத்திற்குள் புகுந்த புலி... என்ன செய்தது என பாருங்கள்!

ஆனால், அதற்கு சாத்தியமில்லை என்று அவர் கூறியிருக்கிறார். நிறுவனம் நடத்திய நேர்காணலில் மூன்றாவது இறுதி சுற்றில் ஒரே ஒரு ஆண் தான் பங்கேற்றார். மற்றவர்கள் அனைவருமே நிராகரிக்கப்பட்டனர். எனவே இதில் எந்த குழப்பமும் நேரிட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தக் குழப்பம் நிறுவனத்தின் முதலாளியான ஹாலிக்கும் ஏற்பட்டுள்ளது. ஹாலியும் நேர்காணலில் ஒரு சில சுற்றுகளில் கலந்து கொண்டார். வேலைக்கு வந்த ஜானுக்கு ஹாலி யாரென்றே தெரியவில்லை. நிறுவனத்தின் தலைவர் என்பதால், அவர் தன்னை மறுபடியும் அறிமுகப்படுத்திக்கொண்டு, தன்னைப் பற்றி சில கேள்விகளை ஜானிடம் கேட்டார். ஜான் எந்த பதிலையும் சரியாக கூறவில்லை.

Also Read : முதன் முறையாக இந்திய உணவை ருசி பார்த்த ஸ்பெயின் பெண்

நிறுவனத்தின் லீகல் குழு ஜானுடைய கம்ப்யூட்டரை டிரேஸ் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜான் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக நிறுவனத்தில் மோசடி செய்து சேர்ந்திருக்கலாம் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜானுக்கு வேறு யாரேனும் வெளியிலிருந்து செய்தி அனுப்புகிறார்கள் அல்லது உதவி செய்துள்ளார்களா என்பதை பற்றிய விவரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கலாம் என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அனுபவங்கள் தன்னுடைய கணவரின் அலுவலகத்தில் தன் கணவருக்கு ஏற்பட்டதாக ஒரு பெண் பகிர்ந்துள்ளார். ஏன் இவ்வாறு நடந்தது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மேலும், இரண்டும் வேறு வேறு நபர்கள் என்று மட்டுமே தெரிந்த நிலையில், வேலைக்கு வந்த ஜானிடம் கேள்விகள் கேட்கத் துவங்கிய போது தனக்கு வேலை செய்ய விருப்பமில்லை, ராஜினாமா செய்கிறேன் என்று ஜான் நிறுவனத்தின் அழைப்புகளை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ஜானை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

ஒரு வாரமாக ஜான் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் என்ன எல்லாம் டவுன்லோட் செய்து கொண்டிருந்தார், அது மட்டுமின்றி அவருடைய கம்ப்யூட்டர் திரும்ப கிடைக்குமா என்பதைப் பற்றி பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் கிளைமாக்ஸ் இல்லாத ஒரு விறுவிறுப்பான நாவல் போல அந்த நிறுவனம் இரண்டு நபர்களும் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள், நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியிடப்பட்டனவா என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அந்த பெண்ணால் முடியாது! ஏனென்றால் அந்த பெண்ணின் கணவர் நிறுவனத்திலிருந்து சீக்கிரம் ராஜினாமா செய்யப் போகிறார் என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

First published:

Tags: Interview, Trending