ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

புலியுடன் செல்ஃபி..! இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் - எச்சரித்த வனத்துறை அதிகாரி

புலியுடன் செல்ஃபி..! இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் - எச்சரித்த வனத்துறை அதிகாரி

பன்னா புலிகள் காப்பகம்

பன்னா புலிகள் காப்பகம்

மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் ஒரு இளைஞர் கூட்டம் புலியை படம் எடுக்க அதை துரத்திக்கொண்டே பின்னல் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh |

  நீங்கள் எப்போதாவது ஒரு புலியைக் கண்டால், நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? ஓடுவதுதான் உங்கள் அனிச்சையாக இருக்கும். ஆனால் இப்போது மக்கள் போனை கையில் வைத்துக்கொண்டு படம் எடுக்கிறேன் வீடியோ எடுக்கிறேன் என்று அருகில் சென்று ஆபத்தை வாங்கிக்கொள்கிறார்கள்.

  விலங்குகளின் அருகில் சென்று உயிர் நீத்த எத்தனை செய்தி வந்தாலும் மக்கள் தங்கள் சாகச செயல்களை விடுவதில்லை. லைக்குகளுக்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வைக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

  கடந்த வாரம், மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் ஒரு இளைஞர் கூட்டம் புலியை படம் எடுக்க அதை துரத்திக்கொண்டே பின்னல் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று சாலையைக் கடப்பதைக் கண்ட பயணிகள் கூட்டமாக அங்கேயே நின்றார்கள். அவர்களில் ஒருவர் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் புலியுடன் செல்ஃபி எடுக்கவும் முயன்றார். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  நீங்கள் ஒரு பெரிய மாமிச உண்ணியைப் பார்த்தால், அதை நீங்கள் பார்க்க விரும்புகிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அது நீங்கள் துரத்துவத்தை ஒருபோதும் விரும்பாது. மீறி பின்தொடர்ந்தால் புலி உங்களை அச்சுறுத்தி கொன்றுவிடும். தயவு செய்து இந்த நடத்தையை செய்ய வேண்டாம் என்று சுசாந்தா நந்தா வீடியோவைப் பகிர்ந்து எழுதியுள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Madya Pradesh, Viral Video