மாரடைப்பால் 6 மணி நேரம் நின்றுபோன இதயம்... அதிசயமாக உயிர்பிழைத்த பெண்...!

உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும்.

மாரடைப்பால் 6 மணி நேரம் நின்றுபோன இதயம்... அதிசயமாக உயிர்பிழைத்த பெண்...!
ஆட்ரே மாஷ் (NYTimes)
  • News18
  • Last Updated: December 7, 2019, 5:36 PM IST
  • Share this:
ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது அதீத பனியால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் மூர்ச்சை அடைந்தார்.

ஸ்பெயினைச் சேர்ந்த ஆட்ரே மாஷ் என்ற 34 வயது பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடனே அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கருதப்பட்ட அப்பெண் 6 மணி நேரத்துக்குப் பின்னர் மீண்டும் உயிர் பிழைத்தார்.

ஆட்ரே மாஷை சோதித்த மருத்துவர் கூறுகையில், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால், உடலில் தாழ்வுவெப்பநிலை காணப்பட்டதால் அது அவரது மூளையைத் தாக்காமல் பாதுகாத்துள்ளது. இதனாலே இவர் 6 மணி நேரத்துக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார்” என்றார்.


அப்பெண் குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் மாரடைப்பு அதீத குளிரால் ஏற்பட்டது. ஆனால், அதே குளிர் பிரதேசத்தில் இருந்ததால்தான் அவரால் மீண்டும் உயிர் பிழைக்க முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “சர்வதேச அளவில் எப்படியெனத் தெரியவில்லை. ஆனால், ஸ்பெயினைப் பொறுத்தவரையில் ஒருவர் 6 மணி நேரம் இதயத்துடிப்பு இன்றி மீண்டும் பிழைத்திருப்பது இது முதல்முறை” என்றுள்ளனர்.

மேலும் பார்க்க: இந்தியர்கள் சூட்கேஸ்களாக இருந்திருக்கலாம்... சூட்கேஸ்களைப் பாராட்டும் ட்விட்டர்...!
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading