ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

என்னது கோல்ட் காபியில் மேகியா..? இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ

என்னது கோல்ட் காபியில் மேகியா..? இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ

கோல்ட் காபி மேகி

கோல்ட் காபி மேகி

Cold Coffee Maggi | இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மேகி நூடுல்ஸில் சமையல் கலைஞர் ஒருவர் தனது கைவரிசையைக் காட்டி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய தெருக்களில் விற்கப்படும் விதவிதமான நொறுக்குத்தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், டீப் ப்ரை மற்றும் ஸ்டீம் உணவுகள் போதாது என்று சோசியல் மீடியாவில் வேறு புதுப்புது காம்பினேஷனில் விநோதமான உணவு வகைகள் வைரலாகி வருகின்றன. போதாக்குறைக்கு வழக்கமான சமையல் முறையில் புதுமையைக் கலந்து சிலர் ஃபியூஷன் டிஷ்களை வேறு அறிமுகப்படுத்தி வருகின்றனர். சிலர் ஒரு உணவின் அசல் சுவையை மாற்றுவதை விரும்புவதில்லை. அப்படி இந்த முறை இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மேகி நூடுல்ஸில் சமையல் கலைஞர் ஒருவர் தனது கைவரிசையைக் காட்டி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

காய்கறி முதல் சிக்கன் வரை விதவிதமான கலவையில் நீங்கள் மேகி நூடுல்ஸை ருசி பார்த்திருக்கலாம்... ஆனால் எப்போதாவது கோல்ட் காபி மேகியை சாப்பிட்டது உண்டா?. “என்னாது கோல்ட் காபிக்குள்ள மேகியா?” என ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சூரி மாதிரி அதிர்ச்சி ஆகாதீங்க. ஷாக்கை குறைத்துக்கொண்டும், மனதை திடப்படுத்திக் கொண்டும் இந்த செய்தியை படித்துவிடுங்கள்.

போட்டியை சமாளிக்கவும், தனித்து தெரிவதற்காகவும் சாலையோர கடை ஒன்றில் உருவாக்கப்பட்ட கோல்டு காபி மேகி, சோசியல் மீடியா உதவியால் தீயாய் பரவி வருகிறது. ஆர்ஜே ரோஹன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோவில், ஒரு கப் கோல்ட் காபியை ஒருவர், பாத்திரத்தில் ஊற்றுவதைக் காணலாம். அதன் பிறகு அதில் மேகி நூடுல்ஸ், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் டேஸ்ட் மேக்கரைச் சேர்க்கிறார். சுடச்சுட தயாராகிக்கொண்டிருக்கும் மேகியில், ஒரு பாக்கெட் காபி பொடியை மலைச்சரல் போல் தூவி, ‘அப்படி ஒரு திருப்பு... இப்படி ஒரு திருப்பு’ என புரட்டி எடுத்து வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.

இதோ அந்த வீடியோ....
 
View this post on Instagram

 

A post shared by RJ Rohan (@radiokarohan)பார்க்க மிகவும் விசித்திரமான இந்த வீடியோவை பார்த்தால் மேகி சாப்பிடும் ஆசை வராது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கான லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி செய்தால் ‘கருடபுராணத்தின் படி நரகத்தில் கும்பீபாகம் தண்டனை தான் கிடைக்கும்” என்றெல்லாம் விதவிதமாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர்.

Also Read : ஹோட்டல் உணவுகள் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கின்றன..? காரணம் இதுதான்

கடந்த சில நாட்களுக்கு முன் ஃபுட் வீடியோவை வெளியிடும் இன்ஸ்டாகிராம் பக்கமான தி கிரேட் இந்தியன் ஃபுடீ-யில் மேங்கோ மேகி தாறுமாறு வைரலானது. அதற்கு முன்னதாக மேகியை பானிபுரிக்குள் வைத்து ‘பானிபுரி மேகி’ என்ற புதுவிதமான நொறுக்குத்தீனியை சாலையோர வியாபாரி அறிமுகப்படுத்தியது இணையத்தில் தீயாய் பரவியது. ஆனால் இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் தான், “அய்யோ போறப்போக்க பார்த்தா... மேகி சாப்பிடுற ஆசையே போய்டும் போலயே” என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Maggi, Trending, Viral Video