வெப்பமண்டல காடுகளின் மீட்பு வேகத்தை அதிகரிக்க காபி கழிவுகளைப் பயன்படுத்தலாம்: ஆய்வில் தகவல்!

வெப்பமண்டல காடுகளின் மீட்பு வேகத்தை அதிகரிக்க காபி கழிவுகளைப் பயன்படுத்தலாம்: ஆய்வில் தகவல்!

காபி கழிவுகள்

காபி கூழின் அடர்த்தியான அடுக்குடன் சிகிச்சையளிக்கப்பட்ட நிலப்பரப்பு இரண்டு ஆண்டுகளில் ஒரு சிறிய காடாக மாறியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காபி உற்பத்தியின் கழிவுப்பொருளான காபி கூழ், விவசாயத்திற்கு பிந்தைய நிலங்களில் வெப்பமண்டல காடுகளை உருவாக்க பயன்படுத்தப்படலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ‘எகோலாஜிக்கல் சொலுஷன்ஸ் மற்றும் எவிடன்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் குழு 35 முதல் 40 மீட்டர் சீரழிந்த நிலத்தில் 30 டம்ப் டிரக் லோடு காபி கூழை பரப்பினர். அதே பரப்பளவு கொண்ட மற்றொரு நிலம் காபி கூழ் இல்லாமல் வெறுமனே கட்டுப்பாட்டு பகுதியாக கவனிக்கப்பட்டது. இது பற்றி அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் ரெபேக்கா கோல் கூறுகையில், " இதன் முடிவுகள் வியத்தகு முறையில் இருந்தன” என்று கூறியுள்ளார்.

காபி கூழின் அடர்த்தியான அடுக்குடன் சிகிச்சையளிக்கப்பட்ட நிலப்பரப்பு இரண்டு ஆண்டுகளில் ஒரு சிறிய காடாக மாறியது. அதே நேரத்தில் காப்பி கூழ் கொட்டப்படாத கட்டுப்பாடற்ற நிலப்பரப்பு பூர்வீகமற்ற மேய்ச்சல் புற்களால் ஆதிக்கம் செலுத்தியது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காபி கூழ் மூலம் பரப்பப்பட்ட பகுதியில் 80 சதவீத விதானம் இருந்தது. அதுவே கட்டுப்பாட்டு பகுதியில் 20 சதவீதத்துடன் இருந்தது. காபி கூழ் பகுதியில் உள்ள விதானங்கள் கட்டுப்பாட்டு பகுதியை விட நான்கு மடங்கு உயரமாக இருந்தது.

மேலும் அரை மீட்டர் தடிமனான காபி கூழ் அடுக்கினை சேர்ப்பதன் மூலம், நிலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆக்கிரமிப்பு மேய்ச்சல் புற்களை நீக்க முடியும் என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த புற்கள் பெரும்பாலும் வனப்பகுதிக்கு ஒரு தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றுவது பூர்வீக மற்றும் முன்னோடி மர இனங்கள், காற்று மற்றும் விலங்குகளின் பரவல் மூலம் விதைகளாக வருவதால் இப்பகுதியை விரைவாக மறுசீரமைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read... 2068-ல் அபோபிஸ் என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் சாத்தியம் இருக்கிறதா? நாசா விளக்கம்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கார்பன், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், கட்டுப்பாட்டு நிலத்துடன் ஒப்பிடும்போது காபி கூழ் சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நிலப்பரப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆய்வு செய்ய காபி கூழ் பயன்படுத்துவதற்கு முன்பும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். காபி கூல் பயன்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் தற்போதுள்ள இனங்கள், மர தண்டுகளின் அளவு, காடுகளின் நிலப்பரப்பின் சதவீதம் மற்றும் விதானப் பதிவைப் பதிவு செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முந்தைய வெப்பமண்டல விவசாய நிலங்கள் பெரும்பாலும் மிகவும் சீரழிந்துவிட்டன மற்றும் மோசமான மண்ணின் தரம் பல தசாப்தங்களாக வனத்தின் வளர்ச்சியை தாமதப்படுத்தியுள்ளது. இப்பொது இந்த புதிய ஆராய்ச்சி மூலம் வெப்பமண்டல காடுகளை மீண்டும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. இது குறித்து பேராசிரியர் கோல் கூறியதாவது, "சீரழிந்த வெப்பமண்டல நிலங்களில் வன மீட்பை விரைவுபடுத்துவதற்கு விவசாய துணை தயாரிப்புகள் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று" எனத் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: