சோஷியல் மீடியாக்களில் பல மில்லியன் மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான ஒன்று யூடியூப். யூடியூப்பில் இந்தியர்கள் உலகிற்கு பல விதமான விஷயங்களை கற்பிக்கிறார்கள் மற்றும் இதன் மூலம் பிரபலமாகவும் இருக்கிறார்கள்.
உதாரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்லோட் செய்யப்பட்ட யூடியூபர் கிஷோரின் C++ video வீடியோவை YouTube-ல் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து உள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பயன் பெற்ற ஆயிரக்கணக்கானோர் அவரது திறமையான கற்பிக்கும் முறைக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து உள்ளனர். இதை அந்த வீடியோவிற்கு கீழிருக்கும் கமெண்ட்ஸ் செக்ஷனில் பார்க்கலாம்.
கோடிங் இங்கு ஒரு கருப்பொருளாக தோன்றினாலும் அவற்றை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். பாப் கலாச்சாரம் அவர்களை மேதாவிகளின் கூட்டம் என்று அழைக்கிறது.
Read More : தமிழில் பேசி உணவு ஆர்டர் கொடுத்த அமெரிக்க யூடியூபர் - உணவை இலவசமாக வழங்கிய கடை உரிமையாளர்!
அதே போல சில யூடியூபர்கள் பல சர்வதேச மொழிகள் மற்றும் நடன அசைவுகளையும் வீடியோக்கள் மூலம் கற்று கொடுத்து மிகவும் பிரபலமாக உள்ளனர்.
நீங்கள் MS Excel கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் பிரபல யூடியூபர் பவன் லால்வானி-யின்(Pavan Lalwani), MS Excel-க்கான முழு தொடக்க வழிகாட்டி வீடியோவை நீங்கள் பார்க்கலாம். இவரின் MS Excel - Introduction - Beginner's Guide என்ற கீழ்காணும் வீடியோவை சுமார் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து பயனடைந்து உள்ளனர்.
youtube-ல் பெரியவர்கள் மட்டுமல்ல பல சிறுவர், சிறுமியரும் தங்களது தனித்திறமையை வெளிகாட்டி பார்வையளர்களை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் Sk Wonder Kids என்ற யூடியூப் சேனலில் வரும் இந்த சிறுவன்யூடியூபில் நமக்கு இயற்பியல் பாடத்தை கற்பிக்கிறார். கடந்த ஆண்டு அப்லோட் செய்யப்பட்ட Vectors Part 1|Physics Class 11 என்ற வீடியோ சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று உள்ளது.
அதே போல Intellipaat என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மணிநேரம் 25 நிமிடங்கள் வரை ஓட கூடிய Python Course-க்கான Python Tutorial வீடியோ கடந்த 2020-ல் அப்லோட் செய்யப்பட்டு 33 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது. உண்மையில் இது ஒரு வகையான கலாச்சார நிகழ்வாக மாறும் அளவிற்கு சென்றுள்ளது. சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ள நைஜீரியாவை சேர்ந்த ஒரு பொறியியல் மாணவர் நான் தைரியமாக சொல்ல முடியும், யூடியூபில் உள்ள இந்தியர்களிடம் இருந்து என்ன நான் கற்று கொண்டேன் என்று என குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோயின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குறிப்பிடத்தக்க வேகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொலைதூர கற்றல் ஒரு புதிய பரிமாணத்தை தழுவியது. இந்நிலையில் கோடிங் முதல் டான்சிங் வரை பல துறைகளில் இந்தியர்கள் யூடியூப் மூலம் ஆசிரியர்களாக மாறி உள்ளது நம்மை மகிழ செய்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.